ஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.

58

ஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள்-2 திரைப்படம் முன்னர்  அறிவித்திருந்தபடியே இம்மாதம் திரைக்கு வருகிறது. இந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் பேனரில் எஸ். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு உருவாகும் நாடோடிகள் 2 திரைப்படத்தில் சசிகுமாருடன் அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வர்வேற்பைப் பெற்றுள்ளது. இப்படதின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனல் பறக்கும் ஆக்‌ஷன், போராட்டம், புரட்சி நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் இணையத்தின் வைரலாகப் பறவிவருகிறது.
Leave a Reply

%d bloggers like this: