சிவகார்த்திகேயனுக்கு வந்த வாழ்வு!!

269

சிவகார்த்திகேயனுக்கு வந்த வாழ்வு!!.

கடந்த சில ஆண்டுகளில் சிவகார்த்திகேயனுக்கு வந்த வாழ்வு போல வேறு எந்த நடிகருக்கும் இருக்காது என்பதற்கு அவரது தற்போதைய சினிமா மார்க்கெட் சாட்சி. மக்களுக்கு என்ன தேவை இல்லை முடியும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு சினிமாவில் களம் இறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார்

இருந்தாலும் அதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது மெரினா படமாக இருந்தாலும் வியாபார ரீதியாக வெற்றியை கொடுத்தது தனுஷ் தயாரிப்பில் வந்த எதிர்நீச்சல் படம் தான்.

அதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சில படங்களில் நடித்தாலும் வளர்த்த கடா மார்பில் முட்டுவதைப்போல தனுஷ் தயாரிப்பில் இருந்து விலகி அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல சிவகார்த்திகேயன். இதற்காக பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்போதே சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரித்த தனுஷ் தன்னை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெற்றி மாறனிடம் சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டுள்ளாராம்.

நீங்களாக இருந்தாலும் சரி, உங்கள் அசிஸ்டெண்ட் ஆக இருந்தாலும் சரி, நல்ல கமர்ஷியல் கதையாக இருந்தால் சொல்லுங்கள், சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்கலாம் என்று இருக்கிறேன் என வெற்றிமாறனிடம் கூறியதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் சிவகார்த்திகேயன் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Leave a Reply

%d bloggers like this: