The Oscar Awards Ceremony has been postponed for two months

ஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது!

202

ஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது! The Oscar Awards Ceremony has been postponed for two months!

93வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது  இந்த ஆஸ்கார் விருதுகள் தான். வழக்கமாக வருடா வருடம் பிப்ரவரி மாதம் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த வருடத்தில் வெளியான படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்காக போட்டியில் எடுத்துக் கொள்ளப்படும்.

[the_ad id=”7251″]

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் இந்த ஆண்டு  சினிமாத்துறையும் ஸ்தம்பித்துள்ளது. ஏகப்பட்ட படங்கள் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவினை இரண்டு மாதங்கள் தள்ளி வைப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது எப்போதும் பிப்ரவரி மாதம் நடக்கும் ஆஸ்கார் விருது விழா 2021 இல் மட்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 2021 பிப்ரவரி மாதம் வரை வெளியாகும் படங்கள் ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: