அஜித்திடம் கெஞ்சிய டைரக்டா் வினோத்! அடம் பிடித்த தல!!

197

அஜித்திடம் கெஞ்சிய டைரக்டா் வினோத்! அடம் பிடித்த தல!!.

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கும் வலிமை படம் 50% முடிந்து விட்டதாக செய்திகள் கிடைத்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய வெறும் இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய வினோத் வெகுவிரைவில் தல அஜீத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஹாலிவுட் தரத்தில் உருவாகும் வலிமை படத்தில் தல அஜித்துக்கு நிறைய சண்டை காட்சிகள் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது.

அதிலும் பைக் ஸ்டன்ட் காட்சிகள் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் பயங்கரமாக எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் தல அஜித் டூப் போடுமாறு வினோத் கேட்டாராம்.

ஆனால் அந்தக் காட்சியின் தன்மை கருதி டூப் வேண்டாம் தானே நேரடியாக நடிப்பதாக அடம் பிடித்து தல அஜித் நடித்த கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதிலும் ஒரு காட்சியில் காட்சியின்போது உயிரையே பணயம் வைத்து நடித்து கொடுத்ததாக வலிமை படத்தில் நடித்தவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு தல அஜித்தின் படங்களிலேயே வலிமை படத்தில் ஏகப்பட்ட சுவாரசியமான காட்சிகளும் அதிரடி சண்டைக்காட்சிகளும் நிறைந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் தடுமாறும் படக்குழுவுக்கு அஜித்துக்கு அண்மையில் ஏற்பட்ட காயமும் காரணமாக கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Leave a Reply

%d bloggers like this: