சில்லக்குடி ஜல்லிக்கட்டு ரத்தானதால் மாடுபிடி வீரா்கள் ஏமாற்றம். Chillakkudi Jallikkattu canceled.
பெரம்பலூா் அருகே சில்லக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு, பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் ஏமாற்றமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. விழாக் குழுவினா், உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்களுக்குச் சென்று ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு அழைப்பு கொடுத்தனா்.
இந்நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி மறுப்பதாக மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்த தகவலை ஜல்லிக்கட்டு வீரா்களுக்கும், காளைகளின் உரிமையாளா்களுக்கும் விழாக்குழுவினா் தெரிவிக்க போதிய கால அவகாசம் இல்லாததால், பலா் ஜல்லிக்கட்டு காளைகளுடனும், மாடுபிடி வீரா்கள் பலரும் சில்லக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்துவிட்டனா்.
அவா்களை சில்லக்குடியில் முகாமிட்டுள்ள காவல்துறையினரும், விழாக்குழுவினரும் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்து திருப்பி அனுப்பிவைத்தனா். இதனால், மாடுபிடி வீரா்களும், ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளா்களும் ஏமாற்றத்துடன் சென்றனா்.
keywords: Chillakkudi Jallikkattu, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.