Chennai-Trichy flight service increased to 22!
தமிழகத்தின் 2 நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: விமான போக்குவரத்து அமைச்சகம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை-திருச்சி (Trichy flight service)
சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியை கருத்தில் கொண்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி 8 விமான சேவைகள் உள்ளன. அதேபோல், சென்னையில் இருந்து திருச்சிக்கு 14 விமான சேவைகள் உள்ளன. இந்நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே இனி 12 விமான சேவையாகவும், சென்னை – திருச்சி இடையே 22 விமான சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் விமான சேவைகள் மார்ச் 30 முதல் அமல்படுத்தப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, தூத்துக்குடி இடையேயான பயணிகள் வசதிகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📢 இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்
Also Read:
துபாய் மெட்ரோவில் இலவச இஃப்தார்!
துபாய் நைஃப் பகுதியில் கொள்ளை: 4 பேர் கைது
UAE விசிட் விசா: கட்டணங்கள் மற்றும் விவரங்கள்