Category: அரியலூர் மாவட்டம்

0

ஜெயங்கொண்டம் அருகே பல கிராமங்களை இணைக்கும் சுத்தமல்லி-வடகடல் இணைப்பு பாலம் கட்ட நடவடிக்கை பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம் அருகே பல கிராமங்களை இணைக்கும் சுத்தமல்லி-வடகடல் இணைப்பு பாலம் உடைந்ததை  கட்டுவதற்கான நடவடிக்கை தினகரன் செய்தி எதிரொலியால் துவங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஜெயங்கொண்டம் அருகே பல கிராமங்களை இணைக்கும் சுத்தமல்லி-வடகடல் இணைப்பு  பாலம் உடைந்து 4 வருடமாகி சீரமைக்கப்படாததால் 9கிமீ சுற்றி வரும் நிலையில்...

0

அரியலூரில் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்த சிக்னல் கம்பங்கள்

அரியலூரில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து  சிக்னல் கம்பங்கள் பயன்பாட்டிற்கே வராத நிலையில் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அரியலூர் நகரில் மெயின்ரோட்டில் காவல் துறை சார்பாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அரியலூரில் பேருந்து நிலையம், தேரடி, சத்திரம் அணணாசலை கலெக்டர் அலுவலக ரோடு போன்ற இடங்களில் சிக்னல்  கம்பங்கள்...

0

ஜயங்கொண்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் காயம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் பெய்துவரும் கனமழையால் 14 வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதில் 3 பெண்கள் காயமடைந்தனர். வட கிழக்கு பருவமழை காரணமாக அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 4 தினங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை...

0

அரியலூர் அருகே தனியார் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை ஏரிகளில் விடக் கோரிக்கை.

அரியலூர் அருகே தனியார் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை ஏரிகளில் விட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியாவிடம் கல்லங்குறிச்சி கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனு: கல்லங்குறிச்சி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்பட்டு...

0

அரியலூர் அருகே லாரி மோதி ஒருவர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி பலத்த காயமடைந்ததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் அருகேயுள்ள கொலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (41). இவர் சனிக்கிழமை நள்ளிரவு அரியலூருக்கு இருசக்கர வாகனத்தில் காட்டுப்பிரிங்கியம் அருகே சென்றபோது அவ்வழியே...

0

செந்துறை அருகே திண்ணையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறிப்பு.

அரியலூர் மாவட்டம்,  செந்துறை அருகே திண்ணையில் அமர்ந்திருந்த ஓய்வு பெற்ற சத்துணவு சமையலரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். செந்துறை ஸ்ரீராம் பள்ளி தெருவில் வசிப்பவர் பத்மா (60), ஓய்வுபெற்ற சத்துணவு சமையலர். இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டின்...

0

அரியலூர் அருகே மனைவி எரித்துக் கொலை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். விக்கிரமங்கலம் அருகேயுள்ள முட்டுவாஞ்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (78). இவரது மனைவி மங்களம் (70). இவர்களுக்கு கலைச்செல்வி (30),இந்திராகாந்தி, ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஆசைத்தம்பி ஆகியோர்  உள்ளனர். இவர்களில் அதே தெருவில்...

0

அரியலூர் அருகே தலைமைக் காவலர் மனைவி கொலை வழக்கில் தப்பியவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

அரியலூர் அருகே தலைமைக் காவலர் மனைவி கொலை வழக்கில் பிடிபட்டு தப்பியவர்  9 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அரியலூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் பரமசிவம். அரியலூர் காவல் நிலைய தலைமைக் காவலரான இவர், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி மைதிலி...

0

ஜெயங்கொண்டம் அருகே மாயமான சிறுவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் விளந்தை அக்ரகார தெருவை சேர்ந்தவர் பாணடியன் மகன் சிவசக்தி(9), 4ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலையில் தனது நண்பன் ராமு மகன் ராமகிருஷ்ணன்(11) என்பவருடன் சேர்ந்து விளையாட செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றான், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை....

0

அரியலூர் அருகே லாரி, பைக் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலி

அரியலூர் அருகே தடை மீறி அசுர வேகத்தில் வந்த சிமென்ட் நிறுவன லாரி, பைக் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அரியலூர் மாவட்டம் இலங்கை சேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(30).திருமணமாகி மனைவி,ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனக்கு சொந்தமான வேனை ஓட்டி வந்தார். இந்நிலையில்...