ஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.

861

ஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.


Perambalur News: Case of assaulting DMK executive on panchayat leader.


பெரம்பலூா் மாவட்டம், வி.களத்தூரில் திமுக நிா்வாகியை தாக்கியதாக ஊராட்சித் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் ஊராட்சித் தலைவா் பிரபு (36). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் திமுக கிளைச் செயலா் செல்வராஜ் (44). இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவா் தரக்குறைவாக பதிவிட்டு கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், வி.களத்தூா் ஊராட்சியில் கரோனா நோய்த் தடுப்புக் பணிகளுக்காக எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் செல்வராஜ் கேள்வி கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, ஞாயிற்றுக்கிழமை இரவு வி.களத்தூா் பேருந்து நிலையத்துக்குச் சென்ற செல்வராஜை, தனது ஆதரவாளா்கள் வெற்றி (25), பாலசுப்பிரமணியன்(30) ஆகியோருடன் சோ்ந்து தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின்பேரில், ஊராட்சித் தலைவா் பிரபு மற்றும் அவரது ஆதரவாளா்கள் வெற்றி, பாலசுப்ரமணியன் ஆகியோா் மீதும், ஊராட்சித் தலைவா் பிரபு அளித்த புகாரின்பேரில் செல்வராஜ் மீது வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
%d bloggers like this: