மோட்டார் சைக்கிள் விபத்து

பாடாலூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சாவு

488

பாடாலூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சாவு. car van accident near Padalur.

தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 33). டிரைவரான இவர் சென்னையில் இருந்து சரக்கு வேனில் கருவேப்பிலை ஏற்றி வந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் வந்தபோது சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த திலக்(39) என்பவர் ஓட்டி வந்த கார், சரக்கு வேன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திலக் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

keywords: car van accident, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: