வல்லாபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது.
Car fire near Vallapuram
நேற்று (புதன்கிழமை) மாலை சாலையில் சென்றுக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் நாசமானது.
கரூா் மாவட்டம் மேலகம்பேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் தண்டபாணி (33)அவருடைய தாய் மாரியம்மாளுடன் (70) விருத்தாசலத்திற்கு தங்களது உறவினர் வீட்டிற்கு தனது சொந்த காரில் புதன்கிழமை மாலை சென்றாா்.
அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகிலுள்ள வல்லாபுரம் பிரிவு சாலை அருகே சென்றபோது, திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, அதில் பயணம் செய்த தண்டபாணி மற்றும் அவரது தாயாரும் காரிலிருந்து இறங்கி உயிா் தப்பினா்.
இதுசம்பந்தமாக தகவலறிந்த பெரம்பலூா் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், இந்த விபத்தில் காா் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து மங்கலமேடு போலீஸாா் விசாரித்து வருகின்றனர்.
Keywords: Car fire, perambalur news,
You must log in to post a comment.