வாலிகண்டபுரம் அருகே காரும், மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்து. Car and motorcycle accident near Valikandapuram.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி துருவம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி மகன்கள் கணேசன் (36), வீராசாமி (33). இவர்கள் 3 பேரும் வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட்டில் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தம்பை அருகே சென்றபோது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிள் மொபட் ஆகியவை அடுத்தடுத்து எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் செல்வராஜ் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
keywords: Car and motorcycle accident, Valikandapuram, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.