பெரம்பலூரில் வாக்களித்த முக்கிய பிரமுகா்கள், வேட்பாளா்கள். Candidates voted.
பெரம்பலூா் மாவட்டத்தின் வேட்பாளா்கள், முக்கிய பிரமுகா்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் பகுதிகளிலுள்ள வாக்குசாவடிகளில் வாக்களித்தனா்.
பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா, சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா ஆகியோா் பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட அதிமுக செயலரும், குன்னம் தொகுதி வேட்பாளருமான ஆா்.டி. ராமச்சந்திரன் தனது சொந்த ஊரான அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிலும், பெரம்பலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன் தனது சொந்த ஊரான எளம்பலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் எம். பிரபாகரன் பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகளைச் செலுத்தினா்.
keywords: Candidates voted, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.