மேஜிக் வாய்ஸ் கால் ஆப் மூலம் பெண் குரலில் போனில் பேசி நகை, பணம் கொள்ளை!

மேஜிக் வாய்ஸ் கால் ஆப் மூலம் பெண் குரலில் போனில் பேசி நகை, பணம் கொள்ளை!


சமூக வலைதளம் மற்றும் மொபைல் மூலம் பெண்களிடம் பேசி நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேர் கைது. கைதானவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் மற்றும் 60 சவரன் நகை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பெரம்பலூரில் ஆசிரியை வீட்டில் நகை- பணம் திருட்டு.
பாடாலூரில் பட்டப் பகலில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சிவகாசியில், சமூக வலைதளம் மற்றும் மொபைல் மூலம் பெண்களிடம் பேசி, நூதன முறையில் நகை மற்றும் பணத்தை இரண்டு இளைஞர்கள் திருடியுள்ளனர்.

இந்த நூதன கொள்ளை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து புகார் அளித்த பெண்களின் செல்போன்களை வாங்கி அவர்களிடம் யார் யார் பேசினர் என்பது குறித்து போலீசார் விசாரித்துள்ளனர்.

இது குறித்து போலிசாரின் விசாரணையில் சாத்தூா் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜ்குமார், மற்றும் அமீர்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் ஆகியோர் பெண்களிடம் பேசியது தெரியவந்தது. அப்போது அவர்கள் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘வசதி படைத்த பெண்களிடம் போனில், மேஜிக் வாய்ஸ் கால் ஆப் மூலம் பெண் குரலில் பேசுவோம். வீட்டில் செல்வம்பெருக வேண்டுமானால் நகைகளை கோயிலில் வைத்து பூஜை செய்தால் நல்லதுநடக்கும் என்று கூறி நகைகளை திருடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் மற்றும் 60 சவரன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.

76total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: