Bus service resumes

பெரம்பலூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பேருந்து மீண்டும் இயக்கம்.

565

பெரம்பலூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பேருந்து மீண்டும் இயக்கம்.

Bus service resumes from Perambalur to Mettupalayam

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து துறையூர், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, அவினாசி வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் பெரம்பலூரில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு செல்லும். அங்கிருந்து மாலை 3.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 10 மணிக்கு பெரம்பலூர் வந்தடையும்.

இந்த பஸ் வெளி மாவட்டங்களுக்கு தினமும் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும், பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்ட இந்த அரசு பஸ், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் இயக்கப்படவில்லை.
சென்னைக்கு இயக்கப்பட்டது

ஆனால், அந்த பஸ் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது கல்லூரிகள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரம்பலூர்-மேட்டுப்பாளையம் அரசு பஸ் இயக்கப்படாததால், பல பஸ்கள் மாறி சென்று வந்தனர்.

இதனால், பெரம்பலூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்று வந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அரசு பஸ்சை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஸ் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மீண்டும் இயக்கம்

இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை ‘தினத்தந்தி’யில் கடந்த15-ந்தேதி பிரசுரமானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் முதல் பெரம்பலூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அந்த பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் பஸ் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.




%d bloggers like this: