துபாய், அபுதாபி பேருந்து சேவை மீண்டும் துவக்கம்.
Bus service resumes from Dubai to Abu Dhabi
ஒரு வருடத்திற்குப் பிறகு துபாய், அபுதாபிக்கிடையேயான பேருந்து போக்குவரத்து மீண்டும் துவங்குகிறது. RTA வின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அமீரகத்தில் பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
பெருந்தொற்று காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த துபாய் – அபுதாபி-க்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் (Bus service resumes) துவங்கப்பட்டுள்ளதாகத் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA தெரிவித்துள்ளது.
இந்த இரு நகரங்களுக்கு இடையிலான பேருந்து சேவையானது இப்னு பத்துதா பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி அபுதாபியில் உள்ள சென்ட்ரல் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின் போது பயணிகள் அனைவரும் முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உட்பட அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று RTA பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது.
துபாயிலிருந்து அபுதாபிக்குப் பயணம் செய்பவர்கள் பின்வரும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தங்கள் AlHosn செயலியில் கிரீன் ஸ்டேடஸ் அல்லது ஸ்டார் குறியீடு வைத்திருக்க வேண்டும்.
- தடுப்பூசி போடாத நபர்கள் எதிர்மறை PCR சோதனை முடிவைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் அபுதாபிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
- பயணிகள் தொடர்ச்சியாக இரண்டு முறை அபுதாபிக்குள் நுழைய DPI சோதனை முடிவுகளைப் பயன்படுத்தக்கூடாது.
- அபுதாபிக்குள் நுழைந்த பிறகு, தடுப்பூசி போடப்பட்ட விசிட்விசாவினருக்கு மேலும் சோதனை தேவையில்லை.
- தடுப்பூசி போடாமல் PCR டெஸ்டில் நெகடிவ் எனக் காண்பிக்கப்பட்டவர்கள் அபுதாபிக்குள் நுழைந்த நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் கூடுதல் சோதனைகளை எடுக்க வேண்டும்.
- DPI டெஸ்ட் எடுத்து அபுதாபிக்கு சென்றவர்கள் மூன்றாவது மற்றும் ஏழாவது நாட்களில் PCR சோதனைகளை எடுக்க வேண்டும்.
மேலும் பல பொது இடங்களுக்குச் செல்வதற்குத் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதில் ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் ஷாப்பிங் சென்டருக்குள் இல்லாத மற்ற சில்லறை விற்பனை நிலையங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் தீம் பூங்காக்கள் ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Keywords: Dubai news in Tamil, Dubai News, Bus service resumes, Gulf news in Tamil
You must log in to post a comment.