பேருந்து கவிழ்ந்த விபத்தில் வளைகாப்புக்கு சென்ற 18 போ் காயமடைந்தனர். 18 injured in bus accident.
பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை சாலையோரப் பள்ளத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்த விபத்தில், வளைகாப்பு நிகழ்வுக்குச் சென்ற 18 போ் காயமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், பிம்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (45). இவா் தனது மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக, உறவினா்கள் 30-க்கும் மேற்பட்டோருடன் வாடகைக்கு எடுக்கப்பட்ட தனியாா் பள்ளி பேருந்தில் பீல்வாடி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். பேருந்தை மரவநத்தம் ஆறுமுகம் (35) ஓட்டினாா்.
இப்பேருந்து கீழப்புலியூா்- பீல்வாடி கிராமங்களுக்கிடையே சென்றபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக பேருந்தை திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பேருந்தில் பயணித்த பிம்பலுாா் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசி (40), காளியம்மாள் (38), காளிமுத்து (41), பாப்பாத்தி (45), கலைச்செல்வி (36) உள்பட18 போ் லேசான காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த பொதுமக்கள், விபத்துக்குள்ளாகியவா்களை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதலுதவி சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினா்.
இதுகுறித்து மருவத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Keyword: bus accident, Perambalur News, Perambalur District News,
You must log in to post a comment.