பிரட் அன்ட் ஜாம் டிபனுக்கு ஈசி, ஆனா உடலுக்கு?

பிரட் அன்ட் ஜாம் டிபனுக்கு ஈசி, ஆனா உடலுக்கு?

குழந்தைகளுக்கு பிரட் ஜாம் கொடுக்கும் பெற்றோர்களே இதை கொஞ்சம் படியுங்கள்.

குழந்தைகளுக்கு அடிக்கடி பிரட் ஜாம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிடுங்கள். பிரட், மைதா மாவில் செய்யப்படுவது என்பதால் குழந்தைகளின் ஜீரனசக்தியை பாதிக்கும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இது அமையும். நாம் டிவி விளம்பரத்தில் பர்ப்பதற்கு வேண்டுமானால் ஜாம் சுவையாக இருப்பதுபோல் தெரியலாம்.  ஆனால் அரை ஸ்பூன் ஜாமில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு அதிகபடியாக கலோரிகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஜாமில் எந்த ஊட்டசத்தும் இல்லை. மேலும் பழங்களை அதிக வெப்பத்தில் வேக வைத்துத்தான் ஜாம் தயாரிக்கப்படுகிறது. இதனால் பழங்களில் இருக்கும் சத்துக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு காலையில்தான் புரோட்டின் மற்றும் மற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை கொடுக்க வேண்டும் ஆனால் பிரட் மற்றும் ஜாமில் அது இல்லை. எனவே சமைக்க ஏதும் இல்லை என்பதாலோ, சோம்பலாக இருக்கிறது என்பதால் குழந்தைகளுக்கு பிரட் ஜாம்  தினமும் காலை உணவாக கொடுக்காதீர்கள்.

29total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: