காலை உணவில் கவனம் தேவை…!
Breakfast is a very important
காலை உணவா? கல்லூரி மாணவனுக்குக் காலை உணவா? சாப்பாடா அதுக்கெல்லாம் நேரம் இல்லை. பேச்சுலர்ஸ் லைப்ல காலை உணவா? வாய்ப்பே இல்லைங்கன்னு பல இளைஞர்களும் மாணவர்களும் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். காலை நேர அவசரம் அல்லது உணவு தயாரிக்க நேரமின்மை, சாப்பிடக்கூட நேரமில்லாதது எனப் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த முக்கியமான காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவை சாப்பிடாததால் நம் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா? தெரிந்து கொண்டால் விடவே மாட்டீர்கள்.
[quote]உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமானது.[/quote]
[quote]உடற் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின்[/quote]
[quote]சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.[/quote]
[quote]குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…[/quote]
காலை உணவைத் தவிர்த்தால்: Breakfast is a very important
- ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாகிறது.
- இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
- சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- சுரப்பிகளில் மாற்றங்கள் உண்டாகும் இதனால் மனதிலும் உடலிலும் உற்சாகம் இல்லாமல் ஆகும்
- பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் சுரப்பி, சாப்பிட்ட உணவு போதுமென உணர்வைத் துண்டும் லெப்டின் சுரப்பிகள் இயல்பு மாறி பிரச்சனைகள் உண்டாகும்.
- கிட்டப் போனால் எட்டப் போ என்னும் சொல்லுமளவிற்கு வாய்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
- வயிற்றுத் தசைகளில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு.
- செரிமானத் தொந்தரவு
- வயிற்றுவலி
- சாப்பிட்டால் எதுக்களித்தல்
போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். நான் எவ்வளவு நாளா காலைச் சாப்பாடு சாப்பிடுவதில்லை தெரியுமா? என்று எகத்தாளமாகச் சிலர் கேட்பார்கள் ஆனால் உடலுக்குண்டான பிரச்சனை நம் உடலானது உடனுக்குடன் வெளிப்படுத்துவதில்லை. அது வெளிப்படுத்தும் போதுதான் நாம் இதுநாள் வரையில் செய்த தப்பை உணர்வோம். வந்ததற்குப் பின் சரிசெய்வதை விட வரும் முன் காப்போமே.
Keywords: Breakfast, Breakfast is a very important
You must log in to post a comment.