boy fell into the dam

தடுப்பணையில் தவறி விழுந்து சிறுவன் பலி

438

தடுப்பணையில் தவறி விழுந்து சிறுவன் பலி. boy fell into the dam and died

அரியலூரை சேர்ந்த கவியரசனின் மகன் ஹரிரோஜன்(வயது 10). இவன் ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாய் கனிமொழியுடன், அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மின்னல்கொடி வீட்டிற்கு ஹரிரோஜன் வந்தான்.

நேற்று மதியம் தனது நண்பன், அதே பகுதியை சேர்ந்த பூமாலை மகன் ரித்திக்குடன் (12) அருகில் உள்ள வெள்ளாறு தடுப்பணையில் மீன்பிடிக்க ஹரிரோஜன் சென்றான். அப்போது அங்கு தேங்கியிருந்த நீரில் ஹரிேராஜன் தவறி விழுந்தான்.

வருடம் முழுவதும் வறண்ட நிலத்திலும் நீர், போர் அமைத்துத் தரப்படும்

15 ஆயிரம் ரூபாயில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்.

சாவு

இதைக்கண்ட ரித்திக் கூச்சல் போட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தான். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் ஹரிரோஜனை மீட்டு பார்த்தபோது, அவன் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், அங்கு விரைந்து வந்து ஹரிரோஜனின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பணையில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

keywords: boy fell into the dam, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: