அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களுக்கு முன்பதிவு துவக்கம்!
Gulf News: Booking of flights from UAE to India begins!
அமீரகத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தற்பொழுது அமீரகத்தில் இருந்து ஆகஸ்ட் 16 முதல் 31 வரை இந்தியா செல்லவிருக்கும் விமானங்களுக்கான டிக்கெட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 11) காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று துபாயில் உள்ள இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
ஆகஸ்ட் 16 முதல் அமீரகத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களானது துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களில் இருந்து இந்தியாவில் இருக்கக்கூடிய 18 நகரங்களுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா திரும்ப வேண்டி தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த விமானங்களில் பயணிக்க முடியும் என்றும், விமானங்களுக்கான டிக்கெட்டை www.airindiaexpress.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது டிராவல்ஸ் ஏஜென்ட்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என அதில் அறிவித்துள்ளது.
இந்தியா செல்ல வேண்டி விமானத்திற்கு முன்பதிவு செய்யும்பொழுது, பயணிகள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை கொடுப்பது கட்டாயம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, இந்தியாவிற்கு பயணம் செல்பவர்கள் 7 நாள் கட்டண தனிமைப்படுத்தலை தவிர்க்க விரும்பினால் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்றும் துணைத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
keyword: Gulf News
You must log in to post a comment.