Blog

  • துபாய் விமான நிலையத்தில் ஒரே நாளில் 2.86 லட்சம் பயணிகள்

    2.86 lakh passengers in a single day at Dubai airport துபாய், அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விடுமுறையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கின்றனர். இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருகியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் இந்த விமான நிலையம் வழியாக 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். கடந்த 12-ந்தேதி முதல்…

  • UAE: இந்திய தூதரகத்தின் பெயரில் இ-மெயில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    Indian Embassy Name Used in E-mail Scam: Public Alert UAE: இந்திய தூதரகத்தின் பெயரில் போலியான இ-மெயில் அனுப்பி மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 36 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். மேலும் வேலைவாய்ப்புக்காக விசிட் விசாவில் பலர் அமீரகத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வேலை தேடி வரும் இளைஞர்களையும், பொதுமக்களையும் குறிவைத்து, சிலர் இந்திய தூதரகத்தின்…

  • அபுதாபியில் இந்திய மருத்துவரின் பெயரில் சாலைக்கு பெயர்

    Abu Dhabi Street Named After Doctor from India அரபு அமீரகத்தின் தலைநகரான அபூ தாபியில், இந்திய வம்சா வழியைக் கொண்டுள்ள மருத்துவர் ஒருவரின் பெயரில் ஒரு சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார துறையில் 84 வயதான அவர் செய்த முக்கிய பங்களிப்புகளுக்காக இப்பெயரிடப்பட்டது. அபு தாபியின் நகராட்சி மற்றும் போக்குவரத்து துறை (DMT), “அரபு அமீரகத்தின் பார்வையாளர்களை கௌரவித்தல்: நினைவுச் சாலைகள்” திட்டத்தின் கீழ், டாக்டர் ஜார்ஜ் மேத்யூவின் பெயரில் ஒரு சாலைக்கு பெயரிட்டுள்ளது.…

  • 100க்கும் மேற்பட்ட பாம்புகளை ட்ரவுசரில் கடத்த முயற்சி

    Attempt to smuggle over 100 live snakes சீனாவில் ஒருவர் தனது கால்சட்டையில் 100க்கும் மேற்பட்ட உயிருள்ள பாம்புகளை கடத்த முயற்சித்த போது பிடிக்கப்பட்டார். சீனாவின் சுங்க அதிகாரிகள் தெரிவித்ததன் படி, பெயரிடப்படாத பயணி, ஹாங்காங் நகரில் இருந்து சீனாவின் எல்லை நகரமான ஷென்சென்னுக்கு கடத்த முயன்ற போது சுங்க அதிகாரிகளால் நிறுத்தப்பட்டார். ”சோதனையின் போது, பயணி அணிந்திருந்த காலின் பைகளில் ஆறு பைகளைப் பொருத்தி ஒட்டப்பட்டு இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டறிந்தனர். ஒவ்வொரு பையைத்…

  • கத்தார் விசா மையங்களில் புதிய சேவைகள் அறிமுகம்

    Qatar Visa Centres Introduce New Services கத்தார் உள்துறை அமைச்சகம் (The Ministry of Interior (MoI)) புதிய சேவைகளை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் இயங்கும் கத்தார் விசா மையங்களில் (QVC) அறிமுகப்படுத்தியுள்ளது. “தற்காலிக வேலை விசாக்களுக்கு மருத்துவ சேவைகள், பல்முறை நுழைவு வேலை வருகை விசாக்களுக்கு மருத்துவ பரிசோதனை சேவைகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரர்களுக்கான பார்வை பரிசோதனை சேவைகள் தற்போது கிடைக்கின்றன,” என விசா ஆதரவு சேவைகள்…

  • துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு

    Dubai Municipality Warns: Clear Neglected Vehicles துபாய் நகராட்சி சோதனை மையங்களில் புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு. அமீரகத்திலுள்ள ஒன்பது பதிவு மற்றும் சோதனை மையங்களில் புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை வாகன உரிமையாளர்கள் விரைவில் அகற்ற எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. உரிமையாளர்கள் அகற்ற தவறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என துபாய் நகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக சோதனை மையங்கள் நிறுத்துமிடங்கள் மற்றும் மைய வளாகங்களில் வாகனங்களை விட்டுச்சென்ற உரிமையாளர்களுக்கு துபாய் நகராட்சியானது 68 வாகன அகற்ற…

Search

Proudly powered by WordPress