Pepper Benefits

மிளகை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள்!! Pepper Benefits

861

மிளகை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள்!! Pepper Benefits in Tamil

நமது அன்றாட உணவில் மிளகும் மிக முக்கியபங்கு வகிக்கிறது. குறிப்பாக அசைவ உணவு வகைகளில் மிளகினை கட்டாயமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சுமார் ஆயிரம் வருடங்களாக உலகளவில் மிளகு பயன்படுத்தப்பட்டு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.  எதற்காக இந்த மிளகினை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். மிளகில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிளகில் (Pepper Benefits) ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. காரத்தன்மை கொண்ட மிளகில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. மேலும் இதன் பலன்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மிளகின் பயன்கள்: Black pepper uses

  • செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி செரிமானப் பிரச்சினைகளை சரி செய்வதில் மிளகு முக்கிய பங்காற்றுகின்றது.
  • சளி, இருமல் பிரச்சனைகளால் அவதிபடுபவர்களுக்கு பாலில் மிளகுப்பொடியினைப் போட்டு குடித்தால் பிரச்சினை உடனடியாகத் தீரும்.
  • வறட்டு இருமலுக்கு முட்டையுடன் கூடுதலாக மிளகு சேர்த்து பொரித்து சாப்பிட்டால் வறட்டு இருமல் பிரச்சினை தீர்ந்து போகும். benefits of black pepper
  • மிளகானது தொண்டை வலி, தொண்டை வீக்கம், தொண்டைப் புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கிறது.
  • உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் மிளகில் டீ போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம்.
  • குழந்தைகள் சாப்பிடும் உணவில் மிளகாய் பொடிக்கு பதிலாக மிளகினை சேர்த்துவந்தால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமானதாக வளரும்.
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட மிளகினை இந்திய மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

கவணம் தேவை

கருப்பு மிளகை அதிகளவில் எடுப்பதன் மூலம் சில பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. ஆகையால் கருப்பு மிளகை எடுத்துக் கொள்ளும் அளவு குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Our Facebook Page

Keywords: Pepper Benefits, கருப்பு மிளகின் பயன்கள்




Leave a Reply

%d
Verified by MonsterInsights