பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி.
One killed in bike-car collision
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.கே.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன்(வயது 50). இவரும், இவருடைய உறவினர்கள் மலர்கொடி (58), சுப்பிரமணி (40) ஆகியோரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முத்தமிழ்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினத்தந்தி
Keywords: bike-car collision one killed
You must log in to post a comment.