சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய சிறுதானியங்கள்..! Best Grains for Diabetics
பொதுவாக சர்க்கரை நோய் என்ற ஒன்று இல்லை என்று சிலர் சொல்லுகின்றனர். ஆனால் பலரும் அதற்காக மருந்துகளை எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்த இந்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தவிற்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எது எப்படியோ இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய சிறுதானியங்களை பார்ப்போம்.

எந்த தானியம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. Which grain is best for diabetics?
தினை
நார்ச்சத்துகளும் புரதமும் நிறைந்திருக்கும் ஒரு வகை சிறுதானியம் இந்த தினை. இந்த தினை அரிசியே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு என்றே சொல்லலாம். தினை அரிசியை சாப்பிட்ட உடன் வயிறு நிறைந்தது போல் ஆகிவிடுவதால் அதிகமாக சாப்பிட தோன்றாது. தினை உணவாக உட்கொள்ளும் போது நம் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றது.
எப்படி சாப்பிடலாம்:
தினை அரிசியை சோறுபோல் வடித்தும் சாப்பிடலாம். தினை அரிசயை கஞ்சியாக காய்த்தும் குடிக்கலாம். தினை பொங்கல், தினை சேமியா, தினை புட்டு, தினை தோசை என்றும் உணவாக சாப்பிடலாம். தினை அவல், தினை உருண்டை, எனத் தினை மாவை வைத்து செய்யகூடிய பலகாரங்களாக சாப்பிடலாம். வாரத்துக்கு மூன்று முறையாவது சாப்பிட்டு வர சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்.
வரகு
பல உணவுகள் சாப்பிட்டவுடன் அது உடனடியாக ரத்தத்திற்கு சர்க்கரையை எடுத்து செல்லும். ஆனால் வரகில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் வேகமாக ரத்தத்தில் சர்க்கரை சேராமல் மெதுவாக சேர்க்கும். இதனாலேயே இந்த வரகு அரிசியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவுதான்.
எப்படி சாப்பிடலாம்:
வரகரிசியும் வடித்தும் சாப்பிடலாம் அல்லது பொங்கல் போல் சமைத்தும் சாப்பிடலாம். இப்பாதுல்ல கால கட்டத்தில் வடித்து சாப்பிடுவது கொஞ்சம் கடிணம் தான் அதனால் வரகு கஞ்சியாக காய்த்தும் குடிக்கலாம். வரகால் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவு. அதற்காக சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை அனைவரும் சாப்பிட்டு ஆரோக்கியத்தை பெறலாம்.
ராகி என்னும் கேழ்வரகு
இதில் பைடோகெமிக்கல்ஸ் இருக்கின்றது. பைடோகெமிக்கல்ஸ் இருக்கும் இந்த கேழ்வரகை சாப்பிட மெதுவாக செரிக்க செய்யும். இதன் காரணமாக ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை சேராமல் சிறிது சிறிதாக மெதுவாக சேரும்.
இதனால் சர்க்கரை சேரும் பிரச்சனை தடுக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளின் நண்பன் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறுதானியம் எதுவென்றால் இந்த கேழ்வரகு எனச் சொல்லலாம்.
எப்படி சாப்பிடலாம்:
கேழ்வரகை மாவாக அரைத்து தோசை, அடை, களி, கூழ் என செய்து சாப்பிடலாம். மேலும் ராகி மாவால் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை எடுத்து கொள்ளலாம்.
Keywords: best food grains for diabetes, Grains for Diabetics, Best Grains for Diabetics