வால்நட் பருப்பு இதன் பயன்கள் தெரியுமா? Do you know the benefits of walnut?
பொதுவாக வால்நட் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மையை தரக்கூடியது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இது மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்தது இது பணக்காரர்கள் மட்டுமே உண்ணக்கூடியது நினைத்து பலர் இதை வாங்கி சாப்பிடுவதில்லை. ஆனால் இதிலுள்ள பயன்களை தெரிந்து கொண்டால் அது எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி சாப்பிட தோன்றும். அப்படி இந்த வால்நட்டில் என்னதான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அப்போ இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
வால்நட் என்று அழைக்கப்படும் இந்த அக்ரூட் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients in walnuts)
கொழுப்பு – 0 கிராம், சோடியம் – 0.2 மில்லி கிராம், பொட்டாசியம் – 441 மில்லி கிராம், புரதச்சத்து – 15 கிராம், விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த வால்நட்டில் உள்ளது. அதே போல மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இதனால் கொழுப்பு எளிதில் கரைக்கும் ஆற்றலை கொண்டது.
வால்நட்ஸ் பயன்கள் – (Benefits of Walnuts)
- இதிலுள்ள புரதச்சத்தும், வைட்டமின்களும் இரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றலை தூண்டுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம் நினைவு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
- ஊறவைத்த வால்நட்ஸை தினமும் பெண்கள் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தினமும் வால்நட்ஸை தவறாமல் சாப்பிட்டு வரலாம்.
- இதில் புரதச்சத்தும் நல்ல கொழுப்பும் இருப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை வழங்குகிறது. வால்நட்ஸை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நம் உடலில் எந்த ஒரு நோயும் தொற்றாமல் பாதுகாக்கிறது.
- தினமும் இரவு சாப்பாட்டிற்கு பிறகு பாலிலோ அல்லது தனியாகவோ அக்ரூட்டை சாப்பிடலாம். இதனால் தூக்கமின்மை பிரச்சினை நீங்கி நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.
- சருமத்தில் ஏற்படும் சருமச் சுருக்கத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டது இந்த வால்நட் என்னும் அக்ரூட். வால்நட் சாப்பிடுவதன் மூலம் சருமம் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கும். தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனை சரியாகும்.
- செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வருவதினால் செரிமான பிரச்சனை சரியாகும். மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்.
- பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் இந்த ஊறவைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதன் மூலம் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும். குறிப்பாக வலியின்றி கற்கள் வெளியேறும்.
- வால்நட்ஸ் சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
- அக்ரூட்டில் அதிக அளவில் பயோட்டின் என்னும் வைட்டமின் பி7 ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுவதால், இது தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைக்கிறது. தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
அப்புறம் என்ன? வால்நட்ஸ் என்னும் அக்ரூட் பருப்பின் பன்களை தெரிந்து கொண்டீர்களா? அப்போ வால்நட்ஸை வாங்கி சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.
keywords: Benefits of Walnuts, Uses of Walnuts, Walnuts benefits, Benefits of Walnuts in Tamil