தினை அரிசியின் பயன்கள். Benefits of Thinai rice.
சிறுதானிய பயிர்களில் முக்கியமானது தினை பயிராகும். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இந்த தினை அரிசியானது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தினையை ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ (Fox Tail Millet) என்று அழைக்கப்படுகிறது. தினையை கதிரோடு பார்க்கும்போது நரியின் வால் போல் தெரிவதால் இந்த பெயரை வைத்ததாக கூறுகிறார்கள்.
தினையில் உள்ள சத்துக்கள் (Benefits Of Thinai Rice In Tamil)
இந்த தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
தினை பயன்கள் (The Powerful Health Benefits of Thinai Rice)
- தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.
- நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
- இச்சிறப்பு தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மன அழுத்த பிரச்சனைகளை தீர்க்கும்.
தினை அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகள்
- இந்த தானியத்தில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையடையும்.
- இந்த அரிசியை கொண்டு செய்யபட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலின் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.
- இதில் கண்களுக்கு நன்மையளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் பார்வை தெளிவடையும்.
- தினையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
- தினை அரிசியை மாவாக இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களி போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலின் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
- இந்த தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.
அப்புறம் என்ன இவ்வளவு பயன்களைக் கொண்ட தினை அரிசியை வாங்கி சமைக்க ஆரம்பியுங்கள்.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |
Keywords: Benefits of Thinai rice, Thinai Arisi benefits, தினை அரிசி பயன்கள், Fox Tail Millet
You must log in to post a comment.