சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! Red Rice
benefits of red rice in Tamil
நம் முன்னோர்கள் சாப்பிட்ட பாரம்பரிய அரிசி வகைகளில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன. அதை நமது மக்கள் திரும்பவும் பழைய பாரம்பரிய அரிசியை வாங்கி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்த பதிவில் நாம் சிவப்பு அரிசியில் சத்துக்கள் அதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 1
இதில் அதிகமான புரதச்சத்து நிறைந்தது. புரதச்சத்து நிறைந்த இந்த சாப்பிடுவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்க்கிறது.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 2
காலை உணவாக இந்த அரிசியினால் செய்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் அன்றைய பொழுது முழுவதும் நமது உடல் மிகுந்த உற்சாகமாக இருக்கும். சிகப்பு அரிசியில் புட்டு, கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 3
சிகப்பு அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 4
உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும்.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 5
இந்த அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 6
எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியில் சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 7
குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட புட்டு மற்றும் இதர வகையான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 8
நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிட கூடாது. ஆனால் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 9
இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சிவப்பு அரிசி (Red Rice) பயன்கள்: 10
முப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. சிவப்பு அரிசி ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |
keywords: Sigappu rice, Sigappu arisi, thai red rice, matta rice,
red rice benefits, Red Rice, சிகப்பு அரிசி, சிகப்ப ரைஸ்
You must log in to post a comment.