“பப்பாளி பழம்” இதன் பலன்கள் தெரியுமா?
benefits of papaya fruit..!
பப்பாளி பழம்: Papaya Fruit
கிராமப்புறங்களில் மிக எளிதாக கிடைக்கும் பழ வகையில் இந்த பப்பாளியும் ஒன்று. ஆனால் நகர்ப்புறங்களில் சென்று அங்கு கிடைக்காமல் அதிக விலை கொடுத்து வாங்கிய பிறகுதான் அதன் அருமையே கிராமங்களில் தற்போது தெரிய வருகிறது. இந்தப்பழமானது வருடம் முழுவதும் கிடைக்கும் பழமாகும். மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. இந்தப்பழத்தை தற்போது கிராமங்களிலும் விலை கொடுத்து வாங்கி உண்ண ஆரம்பித்துள்ளனர். அப்படி என்ன இந்த பப்பாளி பழத்தில் இருக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இதிலுள்ள சத்துகள்: Nutrients in papaya
இந்த பப்பாளி பழத்தில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. இதில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உள்ளது. 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் வைட்டமின் சி 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் நிரம்ப காணப்படுகிறது.
பப்பாளி பழத்தின் பலன்கள்: Papaya Benefits in Tamil
- பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். - பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், பப்பாளி பழத்தை சாப்பிடுங்கள்.
- தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
- பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
- பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
- பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
- பப்பாளி பழத்தில் நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ளன. இது இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது.
- பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் ஸ்கர்வி போன்ற விட்டமின் சி குறைபாடுகள் ஓடி விடும். விட்டமின் சி தான் கொலாஜன் உற்பத்திக்கும் சரும திசுக்களுக்கும் உதவுகிறது. வைட்டமின் சி இன் குறைபாடு இருந்தால் இரத்த சோகை, பலவீனம், தோல் பிரச்சினைகள் மற்றும் ஈறு நோய் போன்ற பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. எனவே இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க பப்பாளி பழத்தை உண்டு வாருங்கள்.
- பப்பாளி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இதனால் பப்பாளி பழம் சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். மேலும் பசி எடுக்காது.
- பப்பாளி பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ளலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதை தடுக்கிறது.
- பப்பாளி தினமும் சாப்பிடுவது உங்கள் கல்லீரலுக்கு துரித உணவுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை சீரணிக்க உதவுகிறது. பப்பாளிக்கு நார்ச்சத்துடன் பப்பேன் எனப்படும் செரிமான நொதி உள்ளது. இது உணவை உடைக்க உதவுகிறது.
- பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் பார்வை திறனை மேம்படுத்துகின்றனர். கண்பார்வை சிதைவு காரணமாக கண்பார்வை வயதுக்கு ஏற்ப பலவீனமடைகிறது. எனவே பப்பாளி பழத்தை சாப்பிடும் போது கண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். கண் பார்வை இழப்பு போன்றவை நேராது.
- ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் , ஃபிளாவனாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் பப்பாளி பழத்தில் காணப்படுகின்றன. இதனால் இது புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. பப்பாளி பழத்தை தினசரி சாப்பிட்டு வருவது பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் நிகழ்வுகளை குறைக்கிறது. இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே இது முழுமையான தீர்வு அளிக்குமா போன்ற சந்தேகங்களை உங்க மருத்துவரிடம் கேட்டு ஆலோசிக்காமல் பின்பற்ற வேண்டாம்.
பப்பாளி காயின் பலன்கள் : Benefits of Papaya
- பப்பாளிக்காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
- பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
- பப்பாளிக்காயைக் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
மற்ற பிற பயன்கள்: Benefits of Papaya
- முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்.
- இதன் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
- பப்பாளிப்பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
- இதன் இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.
- இதன் விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
- நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
எளிதாக கிடைக்கும் இந்தப்பழத்தில் இவ்வளவு பலன்கள் இருப்பதை தெரிந்தும் இனியும் இந்த பழத்தை சாப்பிடாமல் இருக்காதீர்கள். பப்பாளி காய் மற்றும் பழம் சாப்பிட்டு ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.
“பப்பாளி பழம்” இதன் பலன்கள் தெரியுமா? | |
உலர் திராட்சை பயன்கள் | |
பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள் | |
‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..! | |
உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள். | |
‘அத்திப்பழம்’ உண்பதால் உண்டாகும் பலன்கள் | |
பலாப்பழமும் அதன் பயன்களும் | |
பப்பாளி விதையின் அற்புத பயன்கள் | |
சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க |
Keywords: Benefits of Papaya