மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! benefits of moongil rice
மூங்கில் அரிசியின் மருத்துவ பயன்கள். benefits of moongil rice
காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளையே மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு நெல் போலவே இருக்கும். இந்த மூங்கில் அரிசியானது நமது உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மூங்கில் அரிசியின் பயன்கள் என்ன அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
என்ன என்ன சத்துகள் மூங்கில் அரிசியில் உள்ளன?(moongil rice benefits in tamil)
மூங்கில் அரிசியில் அதிகமான கலோரிகள் உள்ளது. அதாவது ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
மூங்கில் அரிசியின் பயன்கள். benefits of Moongil Arisi
- சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி.
- மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிரிசி ஆகியவரை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செத்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து தினமும் குடித்து வர. உடல் வலிமையடையும், சக்கரையை நோயை கட்டுப்படுத்தும்.
- இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
- உடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
- குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.
- இந்த மூங்கில் அரிசியில் செய்த கஞ்சியை சாப்பிடுவதால் பசியை குறைக்கும், உடலில் ஆற்றலை பெருக்கும்.
- இந்த மூங்கில் அரிசியானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் கர்ப்ப கால பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிடலாம்.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உள்ளது. இந்த மூங்கில் அரிசியினை சாப்பிட்டு வந்தால் கழுத்து வலி, இடுப்பு வலி, போன்றவை சரியாகும். அதுமட்டும் இல்லாமல் உடல் வலிமை அடையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.
மூங்கில் அரிசியை எவ்வாறு சாப்பிடுவது?
மூங்கில் அரிசியில் கஞ்சி செய்யும் முறை: Bamboo rice benefits in tamil
தேவையான பொருட்கள்:-
மூங்கில் அரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – ¼ கப்
பிரியாணி இலை – 4
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
புதினா – சிறிது
கொத்தமல்லி – சிறிது
சிறிய வெங்காயம் – 10
உப்பு – தேவைக்கு
முந்திரிப் பருப்பு – சிறிது
ஏலக்காய் – 2
தேங்காய் பால் – 1 கப்
மூங்கில் அரிசியையும், பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் குக்கர் அல்லது மண் பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நீரில் ஊற வைத்த அரிசி, பருப்பையும் போட்டு, தேவையான அளவு நீருடன், கஞ்சியாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கியபின், தேங்காய் பாலைச் சேர்த்து குடிக்கலாம்.
மூங்கில் அரிசியின் விலை சற்று அதிகம் தான் ஆனால் அதன் பயன் மிகவும் அற்புதமானது.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |
Keywords: moongil rice benefits in tamil, bamboo rice, health benefits
You must log in to post a comment.