தேன் நெல்லி உண்பதால் உண்டாகும் மருத்துவ குணங்கள். Benefits of honey gooseberry.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேன் நெல்லியை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல மாற்றங்களை காணலாம். honey gooseberry
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளை ஒன்றாக கொண்டிருக்கிறது இந்த நெல்லிக்கனி. இதில் ஏகப்பட்ட மருத்துவக்குணங்கள் நிறைந்து இருக்கிறது. புளிப்பு மற்றும் துவர்ப்பு கலந்த சுவையை கொண்ட நெல்லிக்கனியை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் தேன் நெல்லியை சாப்பிடலாம்.
தேன் நெல்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையா? கீழே படியுங்கள்..
1. தேன் நெல்லி பயன்கள்: கண்களை பாதுகாக்கும் (benefits of honey amla)
தேன் நெல்லியில் குளுகோஸ், புரக்டோஸ், ஆன் டி ஆக்ஸைடு, இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் அடங்கியுள்ளது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் துண்டுகளை தினமும் சாப்பிட்டுவந்தால் கண் கோளாறு வராமல் தடுக்கும். கண்களில் உண்டாகும் எரிச்சல், கண்களில் சிவப்பு, கண்களில் இருந்து நீர் வடிவது போன்ற கோளாறுகள் வராமல் தடுக்கும். கண் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு தினம் இரண்டு தேன் நெல்லி கொடுத்து வந்தால் கண் பிரச்சனை , பார்வை குறைபாடு நேராமல் இருப்பார்கள்.
2. தேன் நெல்லி பயன்கள்: கர்ப்பப்பை பாதுகாக்கிறது (benefits of honey amla)
கர்ப்பப்பை கோளாறுகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் பெண் பிள்ளைகள் பூப்படைந்த காலம் முதல் தினம் இரண்டு சாப்பிடலாம். மாதவிடாய் பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரிஸ், கர்ப்பப்பை தொற்று என்று ஏற்படகூடிய கோளாறுகளை வராமல் செய்துவிடும். சீரான மாதவிடாய்க்கு உதவும். மாதவிடாய் உபாதைகளை பெருமளவு குறைத்துவிடும். வலி வந்த பிறகு நிவாரணம் தேடுவதை விட இதை தினமும் எடுத்துவந்தால் இந்த பிரச்சனைகளே வராமல் தடுத்துவிட முடியும். பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப்போக்கு பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.இதில் இருக்கும் கால்சியத்தால் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் எலும்புகள் மென்மையாகாமல் வலுப்படுத்தவும் உதவும். ஆனால் தினசரி இரண்டு சாப்பிடுவது அவசியம்.
3. தேன் நெல்லி பயன்கள்: இரத்தத்தை சுத்திகரிக்கிறது (benefits of honey amla)
தேன் நெல்லியில் இருக்கும் வைட்டமின் சி எதிர்ப்புசக்தி தரக்கூடியது. மேலும் இதில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை குறைபாடு பிரச்சனை நேராமல் காக்கிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க நெல்லியும், தேனும் பெருமளவு உதவுகிறது. ரத்த சுத்தி செய்து ரத்த ஓட்டம் சீராகும் போது இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. வளரும் பருவம் முதல் இரண்டு நெல்லி போதும் வாழ்நாள் முழுவதும் இதய நோயிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும்.
4. தேன் நெல்லி பயன்கள்: வயிற்று கோளாறு சரிசெய்கிறது (benefits of honey amla)
செரிமான பிரச்சனையால் பசியின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள் தினமும் இதை சாப்பிட்டுவந்தால் கோளாறு நீங்கி பசி எடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு. மேலும் இவை குளுமை என்று பலரும் நினைக்கிறோம். ஆனால் தேன் நெல்லி தொண்டையில் மட்டுமல்லாது உடலில் இருக்கும் சளியை விரட்டிவிடுகிறது. அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் மசாலா, காரம், புளிப்பு சேர்த்த உணவை எடுத்துகொள்ள கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த தேன் நெல்லி அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்களுக்கும் நன்மை செய்யும்.
5. தேன் நெல்லி பயன்கள்: குடல், சிறுநீரகம் (benefits of honey amla)
வளரும் பருவம் முதல் இதை சாப்பிட்டு வந்தால் வயிற்றுகோளாறுகள் வராமல் தடுக்க முடியும். கல்லீரல் பிரச்சனை வராமல் தடுப்பதோடு கல்லீரலில் இருக்கும் அழுக்கையும் வெளியேற்றும். சிறுநீர் மற்றும் சிறுநீரக கோளாறுகளையும் வராமல் தடுக்கிறது. வைட்டமின் சி இருப்பதால்ஆரம்ப கட்டத்திலேயே தொற்று வராமல் அல்லது தொற்று வந்தாலும் கட்டுப்படுத்தி விடுகிறது. அதோடு குடலில் இருக்கும் அழுக்குகளும் வெளியேறுவதால் மலச்சிக்கல் பிரச்சனை இன்றி உடல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கிறது.
6. தேன் நெல்லி பயன்கள்: சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் (benefits of honey amla)
தினம் இரண்டு தேன் நெல்லி சாப்பிட்டால் சருமம் கூந்தல் என இரண்டு பிரச்சனையும் இருக்காது. சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையாக வைத்திருக்க உதவும். உடல் செல்களை புத்துணர்வூட்டும் வைட்டமின் சி இருப்பதால் சருமம் எப்போதும் ஜொலிஜொலிப்புடன் இருக்கும். இளமையாக இருக்க விரும்பினால் தேன் நெல்லி சாப்பிட்டாலே போதுமானது.
கூந்தல் பிரச்சனையில் வரக்கூடிய இளநரையை தடுக்க இவை பெரிதும் உதவுகிறது. முடி உதிர்வு பிரச்சனை வராமல் இருக்கவும், முடி வளர்ச்சி தடையில்லாமல் இருக்கவும் கூந்தலுக்கு வலு கொடுக்கிறது. தினம் இரண்டு தேன் நெல்லி சாப்பிட்டால் கூந்தலுக்கு தனி பராமரிப்பு தேவையில்லை.
மேற்கண்ட பலன்கள் எல்லாமே நிச்சயம் கிடைக்க வேண்டும் என்றால் தவறாமல் இதை சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஒரு மாதத்தில் இந்த பலனை நீங்கள் உணரக்கூடும். வீட்டிலேயே தயாரித்து சாப்பிடக்கூடிய சிறந்த மருந்து இது. அதுவும் இனிப்பாக இருக்கும் என்னும் போது வளரும் பிள்ளைகளும் மறுக்காமல் சாப்பிடுவார்கள்.
Keywords: Benefits of honey gooseberry, Honey, Gooseberry