Benefits of Eating Pomegranate in Tamil
மாதுளை உண்மையிலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான கனியாகும்! ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் இந்த பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறோம். மாதுளை பழத்தில் உடலுக்கு பல நன்மைகள் உள்ளன. மாதுளையின் முக்கியமான 7 நன்மைகளை இப்போது அறிந்துகொள்வோம்!
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
மாதுளையில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.
2. வீக்கம் பிரச்சனை நீங்கும்
தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட அல்லது அதன் சாறு குடித்து வந்தால், உடலில் ஏற்படும் வீக்கம் பிரச்சனை நீங்கும். மேலும் உடல் வலியிலிருந்து விடுபடலாம்.
3. இதய நோய்களுக்கு நிவாரணம்
மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. மாதுளையில் உள்ள பாலிஃபீனாலிக் கலவைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இதனால் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் மாதுளையை உட்கொள்ள வேண்டும்.
4. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்
உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருக்கும் போது, மாதுளையில் உள்ள கலவை தமனிகளின் வீக்கத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே, உங்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.
5. தோல்களில் ஏற்படும் தழும்புகள் குணமாகும்
மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணமாக்கும் சக்தியுடையவை. மாதுளம் பழத்தை சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். இதனால் தழும்புகளும் மறையும்.
6. கருவுறுதல் பிரச்னை நீங்கும்
திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிடுவது ஹார்மோன் குறைபாடுகளை நீக்கி, கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
7. மூட்டுவலி நீங்கும்
மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கிறது. இவ்வாறு இருந்தால், பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிப்பது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டி, எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவாக இணையதளங்களில் கிடைக்கும் தகவல்களாகும். இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். கல்லாறு மீடிய இந்த தகவல்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தவில்லை.)
Keywords: Benefits of Eating Pomegranate, health tips Tamil, Tamil Health Tips
அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
சப்ஜா விதைகள்: சத்துக்கள் மற்றும் நன்மைகள்
பாதாம் பிசின்: உடல்நல நன்மைகளின் புதையல்
சிவப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்.!
குதிரைவாலி அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகள்.!