benefits of eat jaggery with peanuts

வேர்க்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால்…

858

வேர்க்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உண்டாகும் பயன்கள் தெரியுமா? | Do you know the benefits of eating jaggery with peanuts?

இந்த குளிர்காலத்தில் நமது உடலை சூடாக வைத்திருப்பது மிக முக்கியமாகும். இந்த சமயத்தில் கடலை மிட்டாய் போன்ற வெல்லம் வேர்க்கடலை சோ்ந்த தின்பண்டங்களை சாப்பிடலாம். இவை நமது உடலை வெப்பப்படுத்தும் தன்மையை கொண்டவை. இவை குளிர்கால நோய்களில் இருந்து நம்மை பாதுக்காப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆகையால் இந்த குளிர்காலத்தில் வேர்கடலை உருண்டை மற்றும் கடலை மிட்டாய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

வேர்க்கடலை மற்றும் வெல்லம் (Benefits of eat Jaggery with Peanuts)

வேர்க்கடலையும் வெல்லமும் ஆரோக்கியமான உணவு. மேலும் இது எளிதாக கிடைப்பவை என்பதுடன் சாப்பிடவும் தயாரிக்கவும் சுலபமானவையாக உள்ளது.

வேர்க்கடலை மற்றும் வெல்லத்தில் உள்ள பயன்கள்.

  • மைக்ரோ தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பால்பினால்களின் சூப்பர் கலவையாக இந்த உணவுகள் உள்ளன.
  • அத்தியாவசிய கொழுப்புகளையும் இது அதிகமாக கொண்டுள்ளது. மேலும் இது இதயம் மற்றும் எலும்புகளுக்கு நல்லது. குறிப்பாக தடகளத்தில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் ஜிம்னாஸ்ட்டில் உள்ளவர்காள் இதை உண்பது அவர்கள் எலும்பை பலப்படுத்தும்.
  • இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகமாக இருப்பதால் பழங்களை உண்ணாத குழந்தைகளுக்கு இந்த கடலை உருண்டையை கொடுக்கலாம்.
  • பெண்களுக்கு பருவமடைதல் மற்றும் பிடிப்புகள் வரும்போது அவற்றை எளிதாக்க தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி நிறைந்த இந்த கலவையை கொடுக்கலாம்.
  • வேர்கடலையில் செலினிசம் அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் வெல்லத்தில் மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கருவுறுதல் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கின்றன.
  • இந்த கலவை ஹீமோ குளோபின் அளவை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இரத்த சோகைக்கு எதிராக உடலுக்குப் பாதுக்காப்பு அளிக்கிறது. மேலும் வேர்க்கடலை மற்றும் வெல்லம் இரண்டிலும் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன. இவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. ஏனெனில் இவற்றில் கால்சியல் சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ளதால் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

எச்சரிக்கை

வேர்கடலையுடன் வெல்லத்தை சேர்த்த தின்பண்டங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலம்  மலச்சிக்கல் பிரச்சனை உண்டாக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் மிதமான இந்த தின்பண்டத்தை சாப்பிடுவது சிறந்தது.

அப்புறம் என்ன உடனடியா கடலையும் வெல்லமும் வாங்கி கடலை உருண்டை செய்துவிடவேண்டியது தானே. வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது சுகாதாரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

Our facebook page

Keywords: benefits of eat jaggery with peanuts, benefits of peanuts, Health tips, Peanuts, Jaggery




%d bloggers like this: