Omam water

ஓமம் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்..! Omam water

1645

ஓமம் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்..! Omam water

Benefits of drinking Omam water.

ஓமம் குடிப்பதால் உண்டாகும் பயன்கள். சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமநீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும். ஓமத்தின் மற்ற மருத்துவ பயன்கள் பார்ப்போம்.

குடலை எளிதாக சுத்தம் செய்ய…

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்!

  • ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.
  • கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.
  • பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும். ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம்  அருமருந்து.
  • மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.
  • வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். இன்னும் சிலர் பார்க்க பலசாலியாக இருந்தாலும், மாடிப்படி ஏறினாலோ, சிறிய பொருளை தூக்கினாலோ உடனே மூச்சு இறைக்கும். இவர்கள் ஓமத் திரவத்தை  கருப்பட்டியோடு காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம் பெரும்.
  • சுவை காரணமாக தேவையில்லாமல் அதிகம் உண்டு ஜீரணம் ஆகாமல் தவிப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு ஓமத் திரவம் அருமையாக வேலை செய்யும். பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் ஜீரணமாக ஓமக் கசாயம் மிகவும் நல்லது.
  • உமிழ்நீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்ட ஓமத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் அஜீரணம், வயிற்று உப்புசம், சீதபேதி ஆகியவற்றில் இருந்து நிவாரணம்  கிடைக்கும்.

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Omam Water, benefits of Omam Water




%d bloggers like this: