காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

149

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

நாம சோர்வா இருக்கும் போது நம்மை சுறுசுறுப்பாக வைத்துகொள்ள காபியோ அல்லது டீயையோ குடிப்போம். எல்லோருக்கும் அப்படி தோன்றுவதில்லை என்றாலும் பெரும்பாலோர் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களாகவே இருக்கின்றனர். இப்படி நம் வாழ்வோடு கலந்துள்ள காப்பியைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதாவது காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

காபி என்றால் என்ன?

காபி என்பது வறுத்த காபி கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான பானமாகும். இந்த காபி கொட்டையானது காஃபியா செடியிலிருந்து பெறப்படுகிறது. இதனுள் காஃபின் இருப்பதால் அதன் தனித்துவமான சுவை, நல்ல நறுமணம் மற்றும் உற்சாகத்தை தூண்டும்  பண்புகளுக்காக இதை பெரும்பாலோர் விரும்பி அருந்துகின்றனர். காபியானது உலகளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் பானமாக இருக்கிறது.

காபியில் காஃபின் அதிகளவு இருப்பதால் இதய நோய் உண்டாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருத்தும் இருக்கின்றது. மாரடைப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துகள் உள்ளன.

இப்படி காபியைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருந்த நிலையில் இதற்காக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகமானது எட்டாயிரம் பேரிடம் ஆய்வை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தினமும் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் பல கப், என்று காபி அருந்துபவர்களை தனித்தனியாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் யாருக்கும் காபியால் எந்த பாதிப்பும் உண்டாகவில்லை என்பதை உறுதி செய்தனர்.

காபி என்றால் என்ன? என்பதை பார்த்தோம் அடுத்ததாக அதை குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.


சிறுதானிய வரகு அடை செய்வது எப்படி?

பாரம்பரிய அரிசி என்றால் என்ன?


காபி குடிப்பதால் உண்டாகும் பயன்கள்: Benefits of Coffee

  • ஆற்றலை அதிகரிக்கிறது
  • மூளை சுறுசுறுப்பிற்கு
  • உடல் எடை குறைக்க
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • இதயத்தை பாதுகாக்கிறது
  • நீரிழிவு பிரச்சனையை போக்குகிறது

ஆற்றலை அதிகரிக்கிறது:

நான் ஏற்கனவே சொன்னது மாதிரி நாம் சோர்வாக இருக்கும் போது, ஒரு கப் காபி குடித்தால் போதும். அது உடனடியாக நமக்கு ஒரு எனர்ஜியை தந்து விடுகிறது. இதில் அடினோசின் உள்ளது  இது நரம்புகளை ஊக்கப்படுத்துவதோடு, களைப்பையும் நீக்கி நமக்கு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. காபி குடிப்பதால் நம் உடலுக்கு ஆற்றல் கிடைப்பது போலவே மனதையும் தெளிவாக வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

மூளை சுறுசுறுப்பிற்கு:

கடந்த பாராவில் குறிப்பிட்டது போல, காபி அருந்துவதால் நரம்புகள் தூண்டப்பட்டு ஆற்றலை அதிகரிக்கிறது. இதன் மூலம் நமது மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. அதோடு மட்டுமின்றி, டிமென்ஷியா, அல்சைமர் போன்ற மூளை சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.

உடல் எடை குறைக்க:

காபியானது நமது உடலில் மெட்டோபாலிஷத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நம் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், தினமும் காபி அதிக அளவில் குடிப்பதால் உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக்கொள்வதாக ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்.


பிரபலமான காபி பொடிகளை Amazon-ல் வாங்கி பயனடையுங்கள்.


மன அழுத்தத்தைப் போக்குகிறது: 

காபி உலகம் முழுவதும் பலகோடி மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதுக்கு காரணமே அதன் மணம் தான். இதிலுள்ள காஃபீன் மற்றும் ஆண்டிஆக்சிடன்ட்டுகள் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை போக்குகிறது. அதோடல்லாமல், காபி குடித்த உடனேயே உடல் ரீதியான உடனடி சுறுசுறுப்பை பெறுவதால், சோர்ந்த நம் மனதுக்கு தெம்பை தந்து, உற்சாகமாக மாற்றுகிறது.

இதயத்தை பாதுகாக்கிறது:

தினசரி மூன்று முதல் ஐந்து கப் வரை காபியை குடிப்பதன் மூலம் 15% வரை இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், பக்கவாதம், மாரடைப்பு போன்றவைகள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights