dried apricot fruit

உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள்.

2830

உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள். Benefits of dried apricot fruit

குளிர் பிரதேசங்களில் அதிகமாக விளையக் கூடிய பழமானது இந்த ஆப்ரிகாட். இதில் வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. உலர்த்திய பழங்களில் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கும்.

01.  உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் (dried apricot fruits benefits)

செரிமான பிரச்சனை: சில சமயங்களில் நாம் உண்ணும் உணவானது வயிற்றில் சரியாக செரிமானம் ஆகாமல் போய்விடும். இதன்மூலம் அஜீரண கோளாறுகள் உண்டாகும். இதனை சரிசெய்ய உலர் ஆப்ரிகாட் பழங்களை நாம் உணவு உண்பதற்கு முன்பு சாப்பிட வேண்டும். காரமானி என்ற சத்து இதில் உள்ளதால் நம் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.

02.  உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் (dried apricot fruits benefits)

மலச்சிக்கல்: தினம்தோறும் காலையில் நம் உடலில் உள்ள கழிவுகள் மலமாக முற்றிலும் வெளியேறினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு மலமானது முற்றிலுமாக வெளியேறாது. இதனால் சிலருக்கு வயிற்றில் பல பாதிப்புகள் உண்டாகும். மலத்தை இலகுவாக்கும் செல்லுலோஸ் என்ற சத்து இந்த உலர் ஆப்ரிகாட்டில் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்டிங் என்ற சத்துப்பொருள் நம் உடலில் உள்ள நீரின் அளவை குறையவிடாமல் பாதுகாக்கிறது.

03.  உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் (dried apricot fruits benefits)

செரிமான குழாயை தூய்மை செய்கிறது: மலச்சிக்கலானது சீராகி விட்டாலே செரிமான குழாய் சுத்தமாகிவிடும். செரிமானக் குழாயில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி சுத்தமாக வைக்கிறது. நம் உடலின் ஜீரணத் திரவங்கள் சீராக சுரக்க உலர் ஆப்ரிகாட் பழங்கள் உதவியாக உள்ளது. ஆல்கலைன் என்ற முறையில் செரிமான குழாய் சுத்தப்படுத்தப்படுகிறது.

04.  உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் (dried apricot fruits benefits)

இரத்தசோகை: நம் உடலில் இரும்பு சத்து, குறைந்தாலும், வைட்டமின் எ, சத்துக்கள் குறைந்தாலும், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தாலும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலும் நமக்கு ரத்தசோகை ஏற்படும். இந்த உலர் ஆப்ரிகாட் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உறிஞ்சக்கூடிய தன்மையும் இதில் அடங்கியுள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து இரும்புச் சத்துக்கள் அதிகமாக உறிஞ்சப்பட்டு ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

இரத்தசோகை உள்ளவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். பெண்கள் தினசரி உண்ணும் உணவில் உலர் ஆப்ரிக்காட் பழங்களை சேர்த்துக்கொண்டால் அதிக இரத்தப் போக்கானது கட்டுப்படுத்தப்படும். உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உற்பத்தியாக இது உதவி செய்கிறது.

05.  உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் (dried apricot fruits benefits)

காய்ச்சல்: இந்தப் பழங்கள் நமக்கு ஏற்படும் காய்ச்சலை குறைக்க உதவி செய்கிறது. இந்த உலர் ஆப்ரிகாட் பழங்களை சாறாகவோ அல்லது, அந்த சாற்றுடன் சிறிது நீர், தேன் சேர்த்து திரவமாகவோ தயார் செய்து குடிக்கலாம். நம் தொண்டைக்குள் உலர்ந்த நிலை காணப்பட்டாலும் அதை போக்கும் சக்தி இதற்கு உண்டு. கர்ப்பிணி பெண்கள் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனை சரியான அளவு சாப்பிட்டு வருவதால் நன்மைகளை அடையலாம்.

இரத்தக் கசிவு வலிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்க இந்த உலர் ஆப்ரிக்காட் பழங்கள் மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று நோய்களை சரி செய்யவும் இது உதவியாக உள்ளது.

06.  உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் (dried apricot fruits benefits)

கண் பார்வைக்கு: வைட்டமின் ஏ சத்து இந்தப் பழத்தில் அதிகமாக உள்ளதால் தெளிவான கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நம் உடலில் உள்ள உயிர் அணுக்களையும் திசுக்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. நம் கண்களை பாதுகாக்கவும், கண் புரை நோய்கள் வராமல் தடுக்கவும் உலர் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிட்டு வரலாம்.

இதயத்திற்கு உலர் ஆப்ரிகாட் பழங்களின் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. தாதுப்பொருட்களான பொட்டாசியம் நம் உடலில் உள்ள திரவ நிலையை சமமாக வைக்கக் கூடியது. இதனால் நம் உடலில் உள்ள தசை செயல்பாடுகள் மற்றும் இதயத்துடிப்பு சீராக இருக்கிறது.

07.  உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள் (dried apricot fruits benefits)

ஆஸ்துமா நீங்கும்: காசநோய், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஆப்ரிக்காட் பழங்களை உட்கொண்டு வரலாம். இதனால் மார்புச் சளி தொல்லையும் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேலோங்கும். சரும பிரச்சனைகளுக்கு சர்மத்தில் ஏற்படும் படை, கட்டி, சொரி, புன், அரிப்பு இவைகளை குணப்படுத்த உலர் ஆப்ரிகாட் சாறு பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஆப்ரிக்காட் உதவி செய்கிறது. இதன் மூலம் சருமம் பளபளப்பான தோற்றத்தை பெறும்.

source: dheivegam

our facebook page

“பப்பாளி பழம்” இதன் பலன்கள் தெரியுமா?

உலர் திராட்சை பயன்கள்

பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள்

‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!

உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள்.

‘அத்திப்பழம்’ உண்பதால் உண்டாகும் பலன்கள்

பலாப்பழமும் அதன் பயன்களும்

பப்பாளி விதையின் அற்புத பயன்கள்

சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க

Keywords: Benefits of dried apricot fruit, apricot fruit, dried apricot




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights