பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள் || Benefits of dates.
பழங்கள் பல விதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பழம் பேரீச்சம்பழம். இயற்கையின் கொடையான பழங்களில் ஏதாவது ஒருவகையில் மருத்துவக்குணங்களைக் கொண்டு சிறப்பானதாக இருக்கும். அதே வகையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த பாலைவன பழமான பேரீச்சம்பழத்தினைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வெப்பமான பிரதேசங்களில் அதிகமான விளைச்சலைத் தரக்கூடிய இந்த பேரீச்சம் மிகவும் சிறப்பு மிக்கது. செங்காயாக, கனிந்த பழமாக, காய்ந்த பழமாக, நன்கு காய்ந்த பழமாக இப்படி எல்லா நேரத்திலும் சுவையுடன் ஆற்றலைத் தரக்கூடிய பழம் இந்த பேரீச்சம்பழம்.
பேரீச்சம்பழங்களில் பல வகைகள் இருக்கின்றது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். அரபு நாடுகளுக்குச் சென்றவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அடர் கருமை நிறத்திலும், செந்நிறத்திலும், பெரியதாகவும், சிறிதாகவும், நீளமாகவும் என்று பல வகைகள் இதில் இருக்கிறது இதன் பெயர்கள் முழுவதும் தெரியாது என்றாலும் தெரிந்தவரை எழுதுகிறேன் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பழத்தில் 2000க்கும் அதிகமான வகைகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் தற்போது பிரபலமாக அறியப்படுபவைகளில் சில
- அஜ்வா,
- அன்பரா,
- பார்ஹி,
- ஹலாஸ்,
- குத்ரி,
- சாபாவி,
- சகாய்,
- சுகரி,
- ஜஹிதி,
- குதாக்,
- லூனா,
- மாப்ரும்,
- ரபியா,
- சவாடா,
- சஃப்ரி,
- அஃபந்தீ,
- பைள்,
- பர்னீ,
- பர்ஹீ,
- கர்,
- ஹல்வா,
- ஹில்யா,
- ஜீபைலீ,
- கஈகா,
- கலாஸ்,
- குள்ரீ
என்று பல வகைகள் இருக்கிறது. நமக்குத் தெரிந்ததெல்லாம் பேரீச்சம்பழம் மட்டும் தான்.
உச்சபட்ச வெயில் காலங்களில் இந்த பேரீச்சை பழங்கள் பழுக்க ஆரம்பிக்கிறது. வளைகுடா நாடுகளில் இந்த சீசனில் பேரீச்சம்பழத் திருவிழாக்களே நடத்துகிறார்கள். இப்படி இந்த பழத்தைப்பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த பழத்தினை சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கும் மருத்துவ பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிக்கலாம்:
பேரீச்சம்பழத்தில் உள்ள சத்துகள். (benefits of dates in Tamil)
சர்க்கரை, நார்ச்சத்து, கொழுப்பு, புரதம், நீர், தயமின், ரிபோஃபிளாவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின் B6, B9, C, E, K, கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் (Glucose) போன்று எண்ணற்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றது.
பேரீச்சம்பழம் பயன் 1: செரிமானத்திற்குச் சிறந்த மருந்து. (dates benefits)
இந்த பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன் அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனைத் தினமும் சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கிறது.
பேரீச்சம்பழம் பயன் 2: உடலுக்கு நல்ல ஆற்றல் உண்டாகும். (benefits of dates)
இது நமது உடலின் ஆற்றலை அதிகப்படுத்தும். எப்படி என்று கேட்கின்றீர்களா? இந்த பேரீச்சையில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் ப்ருக்டோஸ் போன்றவை நிறைந்துகிடக்கின்றன. பேரீச்சம்பழத்தைப் பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
பேரீச்சம்பழம் பயன் 3: இரும்புச்சத்து அதிகரிக்கும். (benefits of dates)
இதில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்தினால் இரத்தச்சோகை நோயைச் சரிசெய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தருகிறது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
பேரீச்சம்பழம் பயன் 4: இதயத்தைக் காக்க உகந்தது. (benefits of dates in Tamil)
இந்த பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியத்தினால் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலத்தைத் தருகிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவிபுரிகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் மூன்று பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
பேரீச்சம்பழம் பயன் 5: எலும்பை வலுவாக்கும். (dates benefits)
இதிலுள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயிலிருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.
இதையும் படிக்கலாம்:
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்
குதிரைவாலி அரிசி’ இதில் என்ன இருக்கிறது?
பேரீச்சம்பழம் பயன் 6: உடனடி ஆற்றல். (dates benefits)
பேரீச்சை பழத்தில் சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்து காணப்படுகிறது. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையைச் சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை(எனர்ஜியை)த் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.
பேரீச்சம்பழம் பயன் 7: மலச்சிக்கலைப் போக்கும். (dates benefits)
பேரீச்சை பழம் உண்பதால் மலச்சிக்கல் உண்டாகும் என்ற கருத்து நிலவி வருகிறது. அது தவறான கருத்து. உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம்.
பேரீச்சம்பழம் பயன் 8: ஒல்லியான குழந்தைகள் குண்டாக. (uses of dates)
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் மெலிந்தே காணப்படுவார்கள். வெளியில் சென்று வந்ததும் மூட்டுகளில் வலிப்பதாகச் சொல்வார்கள். இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்குப் பேரீச்சம்பழத்தைத் தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.
பேரீச்சம்பழம் பயன் 9: நரம்புத் தளர்ச்சி. (uses of dates)
வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட நேரம் பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம்பழம் பயன் 10: மூட்டு வலி. (uses of dates)
இன்றைய காலத்தில் பலருக்கும் மூட்டு வலி பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள கால்சியம் குறைபாடாகும். இதைச் சரி செய்யத் தினமும் கொஞ்சம் பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளைச் சரி செய்து விடலாம்.
எண்ணற்ற வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பேரீச்சம்பழம் உண்மையில் இயற்கை கொடுத்த அருட்கொடைதான். பார்த்தோம் படித்தோம் என்று இருந்துவிடாமல் பேரீச்சம்பழத்தினை வாங்கி உண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Keywords: uses of dates, uses of dates in Tamil, benefits of dates