மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு! benefits of cloves in tamil
கிராம்பை உணவுக்கு வாசனை கொடுக்க கூடிய பொருளாக இருப்பதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். வாசனை மற்றும் சுவையை தாண்டி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது இந்த கிராம்பு. மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கிராம்பிலுள்ள ஊட்டச்சத்துகள்: Nutrients in cloves (kirambu)
- கிராம்பில் யூஜெனோல் என்ற பொருள் 70 – 90% உள்ளது.
- அசிடைல் யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற எண்ணெய் பொருட்கள் உள்ளன.
- 100 கிராம் கிராம்பில் 274 கலோரிகள் 13 கிராம் கொழுப்பு 277 மி. கி சோடியம் 1,020 மி. கி பொட்டாசியம் 66 கிராம் கார்போஹைட்ரேட் 6 கிராம் புரதம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் 3% வைட்டமின் ஏ 0.63 கால்சியம் 65% இரும்பு 20% வைட்டமின் பி -6 64% மெக்னீசியம் உள்ளன.
ஆன்டி பாக்டீரியல் தன்மை உடையது: Kirambu Payangal
கிராம்பு மற்றும் அதன் எண்ணெய் பாக்டீரியா கிருமிகளை எதிர்த்து போராட கூடியது. காலாராவை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்குமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாய் துர்நாற்றம் போக்க: Bad breath
வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம் பை எடுத்துக் கொள்ளலாம். இதன் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்குவதால் டூத்பேஸ்ட் போன்றவற்றில் பயன்படுகிறது. இதிலுள்ள யூஜெனோல் அழற்சியால் ஏற்படும் வீக்கம் போன்ற எடிமா பாதிப்புகளை போக்குகின்றன. இது ஒரு வலி நிவாரணி மாதிரி செயல்படுகிறது.
தலைவலி தீர நல்ல மருந்து: Tamilil Kirambu Payangal
யுனானி போன்ற பண்டைய மருத்துவத்தில் கிராம்பு தலைவலியை குணப்படுத்த பயன்படுகிறது. கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவுவது, பால், உப்பு போன்றவற்றில் கிராம்பு போட்டு குடிப்பது உங்க தலைவலியை போக்கும்.
ஜீரண சக்திக்கு உகந்தது: Kirambin maruthuva Payangal
வயிற்றில் எரிச்சல், வாய்வு, குமட்டல் மற்றும் டிஸ்ஸ்பெசியா போன்ற பிரச்சினைகளையும் போக்க கிராம்பு உதவுகிறது. இது சீரண என்சைம்யை சுரக்க செய்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதை தேனுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
கல்லீரல் பாதுகாப்பு: Liver protection
கிராம்பில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. இது மெட்டா பாலிக் வேலையை அதிகரித்து கல்லீரலில் கொழுப்புகள் தங்குவதை அதிகரிக்கிறது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கிறது. இதனால் டயாபெட்டீஸ் நோயாளிகள் கிராம் பை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வயிற்றை ஆரோக்கியமானதாக்க: To keep the stomach clean
வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களை சரி செய்து வயிறு, குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் எந்த நோய்க் கிருமிகளும் நம்மை அண்டாமல் காக்கிறது.
பற்களை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள: To keep teeth healthy
இது ஒரு வலி நிவாரணியாகவும் ஆன்டி செப்டிக் மருந்தாகவும் செயல்படுகிறது. ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பு உதவுகிறது. பல்வலி இருக்கும் போது இந்த கிராம்பை அந்த இடத்தில் அழுத்தி வைத்தால் வலி குறையும். கிராம்பு எண்ணெயும் பல் வலி போக்க சிறந்தது.
எலும்பை வலிமையாக்க: Clove Payangal tamilil
யூஜெனோல், ஃபிளாவோன்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் சேர்ந்து இயற்கையாகவே ஹைட்ரோ-ஆல்கஹால் சாறுகளை கொடுக்கிறது.இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது . எனவே கீழ்வாதம் போன்ற ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு நீங்கள் கிராம்பை பயன்படுத்தலாம்.
நுரையீரல் புற்றுநோயை தடுக்கிறது: Prevents lung cancer
கிராம்பில் ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கீமோ தடுப்பு என்ற பெயரில் இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள்.
சளி, காய்ச்சலுக்கு நல்ல மருந்தாகும்: The best medicine for colds and flu.
அடிக்கடி காய்ச்சல் மற்றும் சளி ஏற்படுபவர்கள் கிராம்பை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து விடுபடலாம். கிராம்பில் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. கிராம்பினை சாப்பிட்டால் அது நமக்கு ஏற்படும் அலர்ஜி பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும். அத்தோடு சிறந்த அலர்ஜி எதிர்ப்பு பண்புடைய மூலிகையாக கிராம்பு செயல்படுகிறது. அதேபோல் தொண்டை மற்றும் பல் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தவும் கிராம்பு உதவுகிறது.
ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது: Helps to increase oxygen levels
ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை உடைய பொருளில் கிராம்பு முதன்மையானது. மசாலா பொருளான கிராம்பை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இன்றைய கொரோனோ யுகத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து இறப்பு ஏற்படுவது தான் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க நினைப்போர், அரை டம்ளர் தேங்காய்ப் பாலில் அரை டீஸ்பூன் கிராம்புத் தூளை கலந்து குடித்தால் போதும். இதனால் உடலில் உள்ள ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும்.
இதில் கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
- பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.
- வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும்.
- ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிப்பதால், ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
- இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்து, கொழுப்பைக் குறைக்கும்.
- வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் என்பதாலேயே பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மருத்து குணம் நிறைந்த இந்த கிராம்பை இனி தூக்கி போடாமா உணவோடு சேர்த்து சாப்பிடுங்க.
“பப்பாளி பழம்” இதன் பலன்கள் தெரியுமா? | |
உலர் திராட்சை பயன்கள் | |
பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள் | |
‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..! | |
உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள். | |
‘அத்திப்பழம்’ உண்பதால் உண்டாகும் பலன்கள் | |
பலாப்பழமும் அதன் பயன்களும் | |
பப்பாளி விதையின் அற்புத பயன்கள் | |
சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க |
You must log in to post a comment.