நெல்லியின் மருத்துவ பயன்கள்..!! Benefits of Amla (Nellie) !!
நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். benefits of amla நெல்லி ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லிக்கனி மழைக்காலங்களில் கிடைக்கும். நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
காயகல்பம் தயாரிக்கவும், தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக நெல்லி பயன்படுபத்தப்படுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.
நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்: Benefits of Amla
நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும்.
அருமையான கண் பார்வை தரும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும்.
பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
குறிப்பு: நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.
நெல்லிக்காயின் பயன்கள்: Benefits of Nellie
- முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை பதித்தவர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
- பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.
- ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
- நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
- இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
- மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
- நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.
நன்றி – நாட்டு மருந்து
Keyword: benefits of amla juice, benefits of amla, nellikka benefits in tamil, health tips,