belly fat reduction

பெரிய தொப்பையை குறைக்க சில யோசனைகள் – belly fat reduction

413

பெரிய தொப்பையை குறைக்க சில யோசனைகள் – belly fat reduction

நண்பர்களே, நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம் உடம்பெல்லாம் நல்ல ஒல்லியா இருக்கு ஆனா வயிற்றுப்பகுதியில் மட்டுமு் தொப்பை பெருசா இருக்குன்னு சொல்வாங்க. இதை குறைப்பது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

  • பலக்கவழக்கங்கள்
  • சாப்பிடும் முறைகள்
  • மண அழுத்தம்
  • ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் என எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

நாம் இதை எப்படி சரிசெய்வது என சில டிப்ஸ்களின் இதில் தெரிந்து கொள்ளலாம்.

effective advice for belly fat reduction

1. காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள்: (Belly Fat)

கட்டாயம் காலை உணவை தவிர்க்க கூடாது. இது நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, எழுந்த ஒரு மணி நேரத்தில் காலை உணவை எடுத்து கொள்ளுங்கள். காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு தொப்பைதான் பெரிதாகி கொண்டே போகும்.

2. மீன் மாத்திரை: (belly fat reduction tips)

மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன் எண்ணெய் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதன் மூலம் இவற்றில் இருக்கும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.

3. நார்ச்சத்து உணவுகள்: (belly fat reduction tips in Tamil)

நார்ச்சத்து உணவுகள் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் செரிக்க உதவுகிறது. குறிப்பாக தானியங்கள், ஓட்ஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு தேவையில்லாமல் பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும்.

4. தொப்பை குறைய சீரகம்: (Fat reduction tips)

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அவற்றில் 2 டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி ஒரு எழுமிச்சை பழத்தை சிறுசிறுத் துண்டாக வெட்டி கொதிக்க வைத்த நீரில் சேர்த்து சிறிது நேரம் மூடிவைக்கவும். பின் சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து மிதமான சூட்டில் காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. தொப்பையை குறைக்க தேன்: (Fat reduction tips in Tamil)

காலை எழுந்தவுடன் வெறும்வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடையுடன் தொப்பையும் குறையும்.

6. நெல்லிக்காய் சாறு: (Thoppai Kuraiya tips)

நெல்லிக்காயின் சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிசாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொளுப்புகள் கரையும்.

7. திரிபலா பொடி: (Thoppai Kuraiya tips Ezhiya Tips)

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.

8. அருகம்புல் சாறு: (Udambu Kuraiya Ezhiya Vazhi)

வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பச்சை பாலில் அருகம்புல் சாறு கலந்து குடித்தால்  உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.

9. ஆமணக்கின் வேர்: (Udambu Kuraiya tips)

ஆமணக்கின் வேர் இடித்த தேன் கலந்து நீரில் இரவில் ஊறவிட்டு காலை அதனை பிழிந்து வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

10. அன்னாசிப்பழம்: (Udambu Kuraiya Alosanai)

அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமம் பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். மறுநாள் காலை அந்த கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட வேண்டும்.

11. இரவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும்: (Fat reduction in Tamil)

பொதுவாக நமது வீட்டு பெரியவர்கள் காலை உணவை ராஜாவை போலவும், மதிய உணவை இளவரசன் போலவும், இரவு உணவை பிச்சைக்காரனை போலவும் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் காலை மற்றும் மதிய உணவுகளில் மட்டும்தான் கிடைக்கிறது. மேலும் உடலுக்கு நாம் வேலைகளையும் கொடுப்போம். ஆகவே 2 வேளையும் நன்றாக சத்துள்ள உணவுகளை சாப்பிடலாம். ஆனால் இரவில் 8 மணிக்குள் குறைந்த அளவில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேற் சொன்ன விசயங்களை பின்பற்றி தொப்பையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

Our Facebook Page




%d bloggers like this: