பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்..! Barley rice benefits in Tamil..!
பார்லி அரிசி கேள்விபட்டவர்கள் இப்போது அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த பார்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று சிலர் இணையதளங்களில் தேட ஆரம்பித்துவிட்டனர். இந்த பதிவில் பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் என்னவென்பதை பார்ப்போம்.
பார்லி அரிசி பலன்கள் – 01
பார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
பார்லி அரிசி பலன்கள் – 02
பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது.
பார்லி அரிசி பலன்கள் – 03
பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.
பார்லி அரிசி பலன்கள் – 04
பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன.
பார்லி அரிசி பலன்கள் – 05
பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைகிறது.
பார்லி அரிசி பலன்கள் – 06
பார்லி அரிசியில் பல வகையான சத்துப் பொருள்களும், சர்க்கரையும் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.
பார்லி அரிசி பலன்கள் – 07
கெட்ட கொலஸ்ட்ராலைப்(எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
பார்லி அரிசி பலன்கள் – 08
நார்ச்சத்து பார்லியில் அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.
பார்லி அரிசி பலன்கள் – 09
இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.
பார்லி அரிசி பலன்கள் – 10
இதில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
பார்லி சூப்
தேவையான பொருட்கள்
- 1 டேபிள்ஸ்பூன் பார்லி, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் – கால் கிலோ,
- பூண்டு (விரும்பினால்) – 5 பல்,
- மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப,
- கொழுப்பு நீக்கிய பால் – சிறிது.
செய்முறை
3 டம்ளர் தண்ணீரில் பார்லியை வேக வைக்கவும். அரை வேக்காடு வெந்ததும், நீளநீளமாக நறுக்கிய காய்கறிகளுடன் பூண்டு சேர்க்கவும். காய்கறிகள் ரொம்பவும் குழைவாக வேகாமல் எடுத்து கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, பால் சேர்த்து சாப்பிடலாம்.
அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
சாமை அரிசியின் பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள் | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
தினை அரிசியின் பயன்கள் || Thinai rice | |
‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா? | |
மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..! | |
‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? | |
‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? |
keywords: Barley, Barley rice, Barley rice benefits, Barley arisi, Barley Soup