பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு. Bar Association Court Neglect.
பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் அதன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில், குன்னம் பகுதியில் வருகிற 24-ந்தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் கோர்ட்டு மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்க உத்தேசித்துள்ளதை கைவிட ஐகோர்ட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெள்ளிக்கிழமை(நேற்று) தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட அனைத்து கோர்ட்டுகளிலும் பணி புறக்கணிப்பு செய்வது என்றும், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், 19-ந்தேதி ஆர்ப்பாட்டமும் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பார் அசோசியேசன் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
keywords: Bar Association, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.