Ballot machines

பெரம்பலூர், குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

132

பெரம்பலூர், குன்னம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன. Ballot machines were sent

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் தொகுதியில் 1,47,320 ஆண் வாக்காளர்களும், 1,54,950 பெண் வாக்காளர்களும், 21 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 3,02,291 வாக்காளர்கள் உள்ளனர்.

குன்னம் தொகுதியில் 1,35,240 ஆண் வாக்காளர்களும், 1,38,442 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளனர்.

தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

கொரோனா அச்சுறுத்தலால் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளதால், வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளும், குன்னம் தொகுதிக்கு 388 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 816 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பெரம்பலூர்- குன்னம் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவினை வாக்காளர்கள் அறியும் வகையில் சாலையில் வெள்ளை வர்ணத்தில் கோடு போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்களும், குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புடன் பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் 80 வகையான பொருட்கள் அடங்கிய பை ஆகியவை லாரிகள் மூலமும், கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் சரக்கு வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது.

பெரம்பலூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு, பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், குன்னம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு, குன்னம் தாலுகா அலுவலகத்தில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது. இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளுக்கு…

பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீத இருப்புடன் 514 வாக்குப்பதிவு எந்திரங்களும், 514 கட்டுப்பாட்டு கருவிகளும், 28 சதவீத இருப்புடன் 548 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களும், 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் குன்னம் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீத இருப்புடன் 930 (ஒரு வாக்குப்பதிவு மையத்திற்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம்) வாக்குப்பதிவு எந்திரங்களும், 465 கட்டுப்பாட்டு கருவிகளும், 28 சதவீத இருப்புடன் 497 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட எந்திரங்கள் மற்றும் பொருட்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால் அதிகாலையில் வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை வாக்குச்சாவடி அலுவலர்கள் பொருத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர்.

தினத்தந்தி

keywords: Ballot machines, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




Leave a Reply

%d bloggers like this: