பஹ்ரைன்: இந்தியா உட்பட குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து பஹ்ரைன் வர தடை. Bahrain suspend entry of travellers.
மே 24 (இன்று) முதல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பஹ்ரைன் வருவதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிஎன்ஏ (BNA) தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் அந்நாட்டு விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த தடை இல்லை ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனை முடித்திருக்க வேண்டும் மற்றும் நாட்டினுள் நுழைந்த பிறகு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று பிஎன்ஏ கூறியுள்ளது.
மேலும் மற்ற நாடுகளிலிருந்து தடுப்பூசி போடப்படாத மற்றும் தடுப்பூசி போடாத நபர்கள் அவரவர் வீடுகளில் அல்லது தனிமைப்படுத்த உரிமம் பெற்ற இடங்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என்று பி.என்.ஏ கூறியது.
இந்த அறிவிப்பானது தேசிய மருத்துவ பணிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட முழுமுயற்சியில் இறங்கியுள்ளது.
பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் ரெஸிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள் அவர் அவர் நாட்டிலிருந்து விமானம் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும். நாட்டிற்கு வந்தவுடன் தங்கள் வீடுகளில் அல்லது தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பத்து நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். பத்து நாள் தனிமைக்கு பிறகு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பி.என்.ஏ தெரிவித்துள்ளது.
You must log in to post a comment.