“பாதாம் பிசின்” இதன் பலன்களை தெரிந்து கொள்வோமா?
Badam pisin benefits.
பாதாம் பிசின் உண்பதால் உண்டாகும் பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதாம் பிசினின் பலன்கள்: Batham Pisin Benefits
- பாதம் பிசினில் தாதுக்கள் அதிகமாக உள்ளது. உடலுக்கு மினரல் எனப்படும் தாதுக்கள் மிகவும் அவசியமாகும் இந்த தாதுக்கள்தான் உடலின் எலும்புகள், தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். தாதுக்கள் அதிகமுள்ள பாதம் பிசினை அதிகம் சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான தாது கிடைக்கும்.
- பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட உடல் சூடு தணியும்.
- நெஞ்செரிச்சல், அசிடிட்டி எனப்படும் வயிற்றில் செரிமான அமிலங்களில் ஏற்றத்தாழ்வால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும்.
- உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்தி வர உடல் எடை குறையும்.
- உடல் எடை கூட விரும்புபவர்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட்டுவர உடல் எடை கூடும்.
- நோயால் பாதிக்கப்பட்டு தேறி வருபவர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் இழந்த உடல் பலம் மீண்டும் கிடைக்கும்.
- சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள், ஊற வைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.
- ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.
- பெண்களுக்கு உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த பிரச்சனை குணமாக மூன்று நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேலையும் ஊறவைத்த பாதாம் பிசினை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
Keywords: Badam pisin benefits, Badam pisin health benefits, Batham Pisin
You must log in to post a comment.