ஷார்ஜாவில் குடும்பம் மட்டுமே தங்கும் பகுதிகளில் இருந்த பேச்சுலர்கள் வெளியேற்றம். bachelors evicted from family-only accommodation in Sharjah
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் குடும்பங்கள் மட்டும் தங்கி இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் தங்கியிருந்தனர். தற்போது ஷார்ஜா முனிசிபாலிடியானது குடும்பங்கள் மட்டும் குடியிருக்கும் பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் பேச்சுலர்களை வெளியேற்றி வருகிறது.
மேலும் இவ்வாறு சட்டவிரோதமாக தங்கி வரும் நபர்களைக் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதேபோல் அபார்ட்மண்ட் பகுதியிலும் சோதனைகள் நடத்தப்படுவதாகவும் ஷார்ஜா முனிசிபாலிடி தெரிவித்ததாக அமீரக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இச்சோதனையின் போது ஆய்வாளர்கள் ஒரு அபார்ட்மெண்டில் பலர் வசிப்பது மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுவது போன்ற விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஷார்ஜா முனிசிபாலிடி இயக்குநர் கூறும்போது, “ஷார்ஜா முனிசிபாலிடி முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டு, பேச்சுலர்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தங்குவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
குடும்பங்களுக்கு ஏற்ற சூழலை உறுதி செய்வதற்கும் அவர்களின் தனியுரிமை, பாதுகாப்பிற்காகவும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஷார்ஜா முனிசிபாலிடி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
keywords: bachelors evicted, gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,
You must log in to post a comment.