Aval Benefits

அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள் || Aval Benefits

1771

அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள்.

Aval Benefits in tamil

கிராமங்களில் இன்றும் அவல் விரும்பும் ஆள்கள் அதிகமாக இருக்கின்றனர். என்ன முன்பு போல் அவல் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை என்ற குறையுண்டு. அவலில் உள்ள நன்மைகள் என்ன அதன் பலன்கள் என்ன என்று தெரியாமல் அதை சாப்பிடுபவர்கள் கிராமங்களில் ஏராளமானோர் இருக்கின்றனர். அதன் சுவையும் லேசான மனமும் நம்மை மீண்டும் மீண்டும் சுவைக்க வைக்கும். வட இந்தியர்களும் அவலை ‘போஹா’ என்று விதம் விதமாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.

‘அவல்’ இதில் அப்படி என்னதான் இருக்கிறது, இதை எப்படி தயார் செய்கிறார்கள், எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

இதை எவ்வாறு தயார் செய்யலாம்:

ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில் உள்ள முழுசத்தும் நமக்கு கிடைக்கிறது.

அரிசியின் வகைகளுக்கு தகுந்தார் போல அவலும் மாறுபடும். உதாரணமாக சிகப்பு அரிசியில் இருந்து சிகப்பு அவல், வெள்ளை அரிசியில் இருந்து வெள்ளை அவல் தயாரிக்கின்றார்கள். தற்போது பாரம்பரிய அரிசி வகைகளில் இருந்து அவல் தயாரிக்கின்றனர். வரகு, சாமை போன்ற சிறுதானியங்களில் இருந்தும் அவல் தயார் செய்கின்றனர்.

அவல் பயன்கள்: Aval Benefits in Tamil

  • அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
  • காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.
  • குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
  • நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.

எப்படி சாப்பிடலாம்: Aval / Poha Benefits in Tamil

வெறும் அவலை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.

  • காலை சிற்றுண்டியாக சாப்பிடுவது நல்லது.
  • சமையல் செய்வது போல வேக வைத்து தாளித்து சாப்பிடுகின்றனர்.
  • பாலில் கலந்தும் சாப்பிடுகின்றனர்.
  • வெறும் அவலுடன் வெல்லம் கலந்து சாப்பிடலாம் அதுவும் நல்ல சுவையாக இருக்கும்.

தற்போது கருப்பு கவுனி அரிசியில் செய்த அவல், சிகப்பு அரிசி அவல், மாப்பிள்ளை சம்பா அரிசி அவல், குதிரைவாலி அரிசி அவல், தினை அரிசி அவல், சாமை அவல், வரகு அவல், கம்பு அவல் என்று தானிய வகைகளிலும் அங்காடிகளில் அவல் கிடைக்கிறது. இனி அடுத்தடுத்த பதிவுகளில் சிகப்பு அவல் அதன் பயன்களை பற்றி பார்ப்போம்.

எங்களின் பேஸ்புக் பக்கம்

அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள்

சாமை அரிசியின் பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள்

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

தினை அரிசியின் பயன்கள் || Thinai rice

‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா?

மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..!

 ‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா?

‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா?




%d bloggers like this: