பெரம்பலூரில் ஆட்டோ டிரைவர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்.
Auto drivers innovative struggle in Perambalur.
பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில், சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து, ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கலையரசி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ், ஓய்வு பெற்ற நல அமைப்பை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். டிரைவர் மீது பொய் புகார் புனைந்து ஆன்லைன் வசூல் வேட்டையில் போலீசார் ஈடுபடக்கூடாது. இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. திட்டமிட்டு மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய-மாநில அரசுகள் பறிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஆட்டோ டிரைவர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தெரிவிக்கும் வகையில், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு கட்டை பெண்கள் தலையில் சுமந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
keywords: Auto drivers, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.