ADVERTISEMENT
Attempt to smuggle over 100 live snakes

100க்கும் மேற்பட்ட பாம்புகளை ட்ரவுசரில் கடத்த முயற்சி

Attempt to smuggle over 100 live snakes

சீனாவில் ஒருவர் தனது கால்சட்டையில் 100க்கும் மேற்பட்ட உயிருள்ள பாம்புகளை கடத்த முயற்சித்த போது பிடிக்கப்பட்டார்.

சீனாவின் சுங்க அதிகாரிகள் தெரிவித்ததன் படி, பெயரிடப்படாத பயணி, ஹாங்காங் நகரில் இருந்து சீனாவின் எல்லை நகரமான ஷென்சென்னுக்கு கடத்த முயன்ற போது சுங்க அதிகாரிகளால் நிறுத்தப்பட்டார்.

”சோதனையின் போது, பயணி அணிந்திருந்த காலின் பைகளில் ஆறு பைகளைப் பொருத்தி ஒட்டப்பட்டு இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டறிந்தனர். ஒவ்வொரு பையைத் திறந்தபோது, அதில் பலவிதமான வடிவங்கள், அளவுகள் மற்றும் நிறங்கள் கொண்ட உயிருள்ள பாம்புகள் இருந்ததாக ” என்று சுங்க அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் 104 பாம்புகளைப் பறிமுதல் செய்தனர். இதில் பால் பாம்பு மற்றும் கார்ன் பாம்பு போன்றவை அடங்கும். பல வகை பாம்புகள் அந்நாட்டைச் சேர்ந்தவை அல்ல. அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த காணொளியில், இரண்டு காவலர்கள் பத்திரமான பிளாஸ்டிக் பைகளில் பாம்புகளைப் பார்வையிடுவதைக் காண்பித்தனர்.

ADVERTISEMENT

சீனா உலகின் மிகப்பெரிய விலங்குகள் கடத்தல் மையங்களில் ஒன்றாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அதிகாரிகள் இதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டின் உயிரின பாதுகாப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டு சட்டங்கள், அனுமதி இல்லாமல் நாட்டிற்கு அந்நாட்டைச் சேர்ந்தவை அல்லாதவற்றை கொண்டு வருவதற்கு தடை விதிக்கின்றன.

பாம்புகள் கடத்த முயன்ற மனிதனின் தண்டனை பற்றி குறிப்பிடாமல் “சட்டங்களை மீறுபவர்கள் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியிருக்கும்,” என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Keywords: Attempt to smuggle, Gulf Tamil News, World Tamil News,

அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

Our Facebook Page

ALSO READ:
கத்தார் விசா மையங்களில் புதிய சேவைகள் அறிமுகம்
துபாய்: புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை அகற்ற உத்தரவு
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *