Athletic competition

பெரம்பலூரில் இளையோருக்கான தடகள போட்டி.

337

பெரம்பலூரில் இளையோருக்கான தடகள போட்டி.

Athletic competition

இளையோருக்கான தடகள போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள், இளம் பெண்கள், உள்ளிட்ட இளையோருக்கான தடகள போட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

இதில் 12, 14, 16, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கும், 18 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.
பெரம்பலூரில் நேற்று பரவலான சாரல் மழை பெய்தாலும், மழை பெய்து நின்ற இடைவெளியில் போட்டிகள் நடத்தப்பட்டது. 60 மீ, 100 மீ, 300 மீ, 600 மீ, 800 மீ, 1500 மீ, 2000 மீ, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 4-க்கு 100 மீ கலப்பு தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏறத்தாழ 200 பேர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். போட்டிகளை பயிற்சியாளர் கோகிலா உள்ளிட்ட உடற்கல்வி இயக்குனர்கள்-ஆசிரியர்கள் குழுவினர் நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினத்தந்தி

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Athletic competition, Perambalur News




%d bloggers like this: