அறுகம்புல் பொடியின் மருத்துவ பயன்கள்..!
Arugampul benefits in Tamil..! மழைக்காலம் என்பதால் அறுகம்புல்லுக்குப் பஞ்சமே இறுக்காது. அதுவும் கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அதிகமாகவும், எளிமையாகவும் கிடைக்கக்கூடியது. இந்த புல் வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பல பயன்கள் இருக்கின்றது. அவை என்ன என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பதிவு கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் மலைக்காமல் படிக்கவும்.
அறுகம்புல் பற்றி: Arugampul
அறுகம்புல் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒரு வகை புல் ஆகும். இந்த அறுகம்புல்லானது குறுகலான நீண்ட இலைகளை உடையது. நேராக வளரக்கூடிய தண்டுகளையும் கொண்டுள்ளது. இது வயல் வெளிகளிலும், வரப்புகளிலும், வெட்டவெளி நிலப்பரப்புகளில் வளரக்கூடிய ஒரு புல் வகையாகும். இது விதைகளின் மூலமாகவும், சல்லி வேர் முடிச்சுகள் மூலமாகவும் இனவிருத்தி ஆகின்றது.
அறுகம்புல் பொடியின் பயன்கள்: Arugampul podi benefits in Tamil
மாதவிடாய் பிரச்சனைகள்: Menstrual problems
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அறுகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், இரத்தப் புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி போன்ற நோய்களைக் குணமாக்கும்.
நரம்புத் தளர்ச்சி: Nervousness
அறுகம்புல் பொடியைத் தண்ணீரில் குடிப்பதன் மூலம் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைக் குறைக்கும்.
வாய்வு கோளாறு:
வாய்வு கோளாறு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் அறுகம்புல் ஜூஸ் குடிப்பதன் மூலம் வாயுக் கோளாறு குணமாகும். மேலும் இது உடல் உஷ்ணத்தைத் தனித்து உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும் மற்றும் குடல் புண்களை ஆற்றும்.
புற்றுநோய்:
ஆரம்ப கால் புற்றுநோய்க்குக் காலை, மாலை சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியை அரை தேக்கரண்டி வெண்ணெய்யுடன் சாப்பிட, ஆரம்ப புற்றுநோய் சரியாகும்.
இதய நோய்:
ரத்த அடைப்பு, உள்ளவர்கள் வெந்நீரில் அறுகம்புல் பொடியினை சாப்பிடச் சரியாகும்.
வாதம்:
கபத்தைத் தடுக்க அறுகம்புல் பொடி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். கபம் வாதம் பித்தம் இவை மூன்றையும் சமன் செய்வதற்கு உதவுகிறது. வாதத்திற்கு அறுகம்புல் பொடி உடன் மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பித்தத்திற்கு அறுகம்புல் பொடியுடன் இஞ்சி சேர்த்துச் சாப்பிட வேண்டும். கபத்திற்கு அறுகம்புல் பொடி உடன் திப்பிலி பொடியுடன் சாப்பிட வேண்டும்.
சரும பிரச்சனை: Skin problem
சொறி, சிரங்கு, படை, பூச்சிக்கடி, தேள், பூரான் கடிக்கு, ஐம்பது கிராம் அறுகம்புல், ஐம்பது கிராம் குப்பைமேனி பொடி செய்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை சாப்பிட்டு வருவதன் மூலமாகச் சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
வெள்ளை வெட்டை:
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை வெட்டைக்கு, ஐம்பது அறுகம்புல் பொடி ஐம்பது கிராம் கடுக்காய் பொடி சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். அதனைத் தினமும் காலை, மாலை, சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஒருடம்ளர் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி பொடி போட்டு குடித்து வரவும். அவ்வாறு குடித்து வருவதன் மூலமாக நாளடைவில் வெள்ளை வெட்டை குணமாகும்.
தீராத சளி இருமல்: Cold cough
குழந்தைகளுக்குத் தீராத சளி இருமலுக்கு அறுகம்புல் துளசி இரண்டையும் சிறிதளவு சேர்த்து அதனைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்து காலையில் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல் தீராத சளி,இருமல் சரியாகும்.
உடல் உஷ்ணம்: Body heat
அறுகம்புல் பொடி, கஸ்தூரி மஞ்சள் தூள், பச்சை பயிறு மூன்றும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்த பொடி கொண்டு குளித்து வருவதன் மூலமாக உடல் உஷ்ணம், சொறி, சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, அனைத்தும் சரியாகும்.
தேவையற்ற கொழுப்பு: Unwanted fat
அறுகம்புல் பொடியைக் காலை மாலை சாப்பிடுவதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற நீர், தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். கை கால் வீக்கத்திற்கும், அருகம் புல் சாப்பிடச் சரியாகும்.
பசி உணர்வு: Feeling hungry
எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரு சிலருக்குப் பசி உணர்வு அடங்காது. இவர்கள் அதிக அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அதீத பசி உணர்வினை கட்டுப்படுத்த தினசரி அறுகம்புல் ஜூஸ் அருந்தி வந்தால் போதும்.
எலும்பு உறுதி:
மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் எலும்பின் உறுதிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இந்த இரண்டும் அறுகம்புல்லில் நிறைந்து காணப்படுகிறது. எனவே அருகம் புல் ஜூஸை காலை குடித்து வருபவர்களுக்கு எலும்பு உறுதியாக இருக்கும்.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
You must log in to post a comment.